- Advertisement -
Homeபொழுதுபோக்குசிறுத்தை சிவா படங்களில் தெலுங்கு வாடை அடிப்பதற்கு முக்கிய காரணம் இவர்தானாம்? வெளியான சீக்ரெட்

சிறுத்தை சிவா படங்களில் தெலுங்கு வாடை அடிப்பதற்கு முக்கிய காரணம் இவர்தானாம்? வெளியான சீக்ரெட்

- Advertisement -

பல தெலுங்கு திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சிவா, “சௌர்யம்” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் “சிறுத்தை” திரைப்படத்தை இயக்கிய சிவா, அதன் பின் தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய இயக்குனராக வலம் வந்தார். அஜித்தை வைத்து “வீரம்”, “வேதாளம்”, “விவேகம்”, “விஸ்வாசம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய சிவா, ரஜினிகாந்தை வைத்து “அண்ணாத்த” திரைப்படத்தை இயக்கினார்.

“அண்ணாத்த” திரைப்படத்தை தொடர்ந்து சிவா, தற்போது சூர்யாவை வைத்து “கங்குவா” திரைப்படத்தை இயக்கி வருகிறார். “கங்குவா” திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திசா படானி நடித்து வருகிறார். இத்திரைப்படம் ஒரு வரலாற்று புனைவு திரைப்படமாக உருவாகி வருகிறது.

- Advertisement -

அதே போல் “கங்குவா” திரைப்படம் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. எப்போதும் சிறுத்தை சிவா திரைப்படங்கள் கொஞ்சம் தெலுங்கு வாடை அடிக்கும். அதாவது வசனங்கள், சண்டை காட்சிகள் ஆகியவை அப்படியே தெலுங்கு சினிமா பாணியிலேயே இடம்பெற்றிருக்கும்.

இந்த நிலையில் இயக்குனர் சிவா குறித்து ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. சிறுத்தை சிவாவுக்கு ஐடியா கொடுக்கவே ஒரு நபர் அவருடன் எப்போதும் இருக்கிறாராம். சிறுத்தை சிவா இயக்கிய பல திரைப்படங்களுக்கு அவர்தான் ஐடியா கொடுத்தாராம். அதே போல் “கங்குவா” திரைப்படத்திற்கும் அந்த நபர்தான் ஐடியா கொடுத்தாராம். இவ்வாறு ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

“கங்குவா” திரைப்படம் தெலுங்கில் ராம் சரண் நடித்த “மகதீரா” திரைப்படத்தை போலவே மறு பிறவியை மையமாக வைத்து உருவாகி வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்