- Advertisement -
Homeபொழுதுபோக்குவாயை திறந்தாலே வம்பு தானா? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஜோதிகா - என்னம்மா நீங்க...

வாயை திறந்தாலே வம்பு தானா? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஜோதிகா – என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…

- Advertisement -

எப்போதுமே எதையாவது விவகாரமாக பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் பிரபலங்கள் சிலர் இருக்கவே செய்கின்றனர். குறிப்பாக தமிழ் சினிமாவில் நடிகை வனிதா விஜயகுமாரை அந்த லிஸ்ட்டில் கண்டிப்பாக சொல்வார்கள். ஏனென்றால் எதையாவது குண்டக்க மண்டக்க பேசி கொளுத்தி போட்டு விடுவார். அது இணையத்தில் தீயாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது.

அந்த வரிசையில் நடிகை ஜோதிகாவும் அப்படிதான். சமூக கருத்துகளை பேசுகிறேன் என்று சொல்லி எதையாவது பேசி வம்பில் மாட்டிக் கொள்கிறார். கோவில்களுக்காக செலவிடும் பணத்தை பள்ளிகள் மருத்துவமனைகளுக்கு செலவிடுங்கள் என்று அவர் பேசியது முதலே அவர் மீதான விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

- Advertisement -

கடந்த ஆண்டு இந்தி நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர் மாதவன், நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்த நடித்த படம் சைத்தான். இந்த படம் இந்தியில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை டைரக்டர் விகாஸ் டைரக்ட் செய்திருந்தார். சைத்தான் படத்தின் வெளியீட்டு விழாவில் நடிகை ஜோதிகா பேசிய வீடியோ ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் நடிகை ஜோதிகா பேசியதாவது, சமீபத்தில் நான் மலையாளத்தில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடித்தேன். அவருக்கும் அஜய் தேவ்கனுக்கும் ஒரு ஒற்றுமையை பார்க்கிறேன். படப்பிடிப்பில் இருவரும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்துப் போனார்கள். தமிழில் நான் கிட்டத்தட்ட எல்லா நடிகர்களுடனும் நடித்திருக்கிறேன்.

- Advertisement -

ஆனால் நான் நடித்த படத்தின் போஸ்டரில் கூட என் முகம் வராது. ஆனால் அஜய் தேவ்கன், மம்மூட்டி போன்ற நடிகர்கள் திரையுலகிற்கு திருப்பிக் கொடுக்க நினைக்கிறார்கள். இதில் நிறைய பேர் திரையுலகில் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிலர்தான் திருப்பித் தர நினைக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார்.

தனக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தி ஹீரோக்களை மலையாள ஹீரோக்களை நடிகை ஜோதிகா புகழ்ந்து பேசிவிட்டு போகட்டும். ஆனால் எதற்காக தமிழ் ஹீரோக்களை இவர் இப்படி விமர்சிக்கிறார். இவருக்கு அடையாளம் தந்ததே சந்திரமுகி, மொழி போன்ற தமிழ் படங்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கோபமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்