தமிழ் சினிமாவில் 2024ம் ஆண்டில் வெளியான மிக மோசமான படம் இந்தியன் 2 என்ற அவப்பெயரை, கங்குவா படம் பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்று விட்டது. இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகர் சூர்யா என்றாலே ரசிகர்கள் தூக்கத்தில் கூட அலறும் அளவுக்கு ரசிகர்களை காதுகளை செவிடாக்கும் கத்துவா படத்தை தந்துவிட்டதாக விமர்சனங்கள் இருந்து வருகிறது.
இந்நிலையில் சூர்யாவின் மனைவி ஜோதிகா, கங்குவா படம் குறித்து கூறியிருப்பதாவது, நடிகர் சூர்யாவின் மனைவியாக இல்லாமல் நடிகை ஜோதிகாவாகவும், சினிமா ரசிகையாகவும் இந்த குறிப்பை எழுதுகிறேன். சினிமாவில் கங்குவா ஒரு அதிசயம், சூர்யா உங்களைப் பற்றி பெருமையாக இருக்கிறது, நடிகராக இருப்பதற்காகவும் சினிமாவை முன்னோக்கி கொண்டு செல்லவும் நீங்கள் இப்படி கனவு காண்கிறீர்கள் சூர்யா.
கங்குவா படத்தில் முதல் அரைமணி நேரம் நிச்சயம் பலன் அளிக்காது. ஒலி மிகவும் இரைச்சலாக உள்ளது. இந்திய திரைப்படங்களில் குறைகள் என்பது பெரும்பாலும் இருக்கும். அது மிகவும் நியாயமானதும் கூட. குறிப்பாக இதுபோன்ற படங்களில் பெரும் அளவில் பலரும் பரிசோதனை செய்கின்றனர், முதல் அரை மணி நேரத்திலிருந்து கடைசி மூன்று மணி நேரம் வரை அதுதான்.
ஆனால் உண்மையில் இது ஒரு மிகச்சிறந்த சினிமா பார்க்கும் அனுபவம். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஒளிப்பதிவு வேலையை கொண்டு சென்றதை பார்த்ததில்லை. ஊடகங்களில் இதுபோன்ற எதிர்மறையான விமர்சனங்களை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பழமையான கதைகள், பெண்கள் பின்னால் சுற்றுவது போன்றவை, இரட்டை அர்த்த வசனங்கள், ஆக்சன் காட்சிகள் என அறிவுத்தனம் இல்லாத சில பெரிய பட்ஜெட் படங்களுக்கு அவர்கள் இப்படி செய்யவில்லை.
கங்குவா படத்தில் உள்ள நேர்மறையானவற்றை சொல்லி இருக்கிறார்களா, இடைவேளைக்கு பின்வரும் பெண்கள் சண்டையிடும் காட்சி, கங்குவா மீது அந்த சிறுவனுக்கு உள்ள அன்பு, துரோகம் ஆகியவற்றை அவர்கள் விமர்சனம் செய்யும்போது மறந்து விட்டார்களா? ஒருவர் படிக்க வேண்டுமா, கேட்க வேண்டுமா அல்லது நம்ப வேண்டுமா என இப்போது எனக்கு ஆச்சரியமாக கேட்கத் தோன்றுகிறது. முதல் நாளிலேயே இப்படியான அதிக எதிர்மறையானவற்றை சிலர் தேர்வு செய்வது வருத்தமாக உள்ளது.
அற்புதமான காட்சிகள் 3டி உருவாக்கம் என இப்படியான கருத்தை உருவாக்க அவர்கள் முயற்சித்ததற்கு பாராட்ட வேண்டும். கங்குவா குழுவினரே பொறுமையாக இருங்கள் எதிர்மறை கருத்துக்களை சொல்பவர்கள் ஏதோ சொல்கிறார்கள் அவர்கள் சினிமாவில் முன்னேற்றத்திற்காக எதுவும் செய்வதில்லை என குறிப்பிட்டுள்ளார். உங்கள் கணவர் சூர்யாவும், நீங்களும் பல கோடி சம்பளம் வாங்குவது யாரால் என்று யோசித்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





