- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவை விட்டு தற்காலிகமாக ஒதுங்கிய நடிகை ஜோதிகா… - அதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் முக்கிய காரணங்கள்...

சினிமாவை விட்டு தற்காலிகமாக ஒதுங்கிய நடிகை ஜோதிகா… – அதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் முக்கிய காரணங்கள் இவைதானா?

- Advertisement -

கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன. குறிப்பாக நடிகர்கள் அஜீத்குமார் விஜய் விக்ரம் சூர்யா மாதவன் போன்றவர்களின் படங்களில் ஜோதிகா நடித்திருக்கிறார்.

ஜோதிகா நடித்த படங்களில் பி வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் மிக முக்கியமானது. கடந்த 2005ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் படத்தின் மையக்கதையில் ஜோதிகா நடிப்பே பெரிய அளவில் வரவேற்பை பாராட்டை பெற்றது. குறிப்பாக கடைசி 20 நிமிடங்களில் ஜோதிகா நடிப்பை பெரிய அளவில் பேசப்பட்டது.

நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்த பிறகு நடிகை ஜோதிகா 7 ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்தாா். பிறகு மீண்டும் 36 வயதினிலே படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மகளிர் மட்டும் உடன்பிறப்பே ராட்சஷி தம்பி என சில படங்களில் நடித்தார். இந்தியிலும் சைத்தான் ஸ்ரீகாந்த் போன்ற சில படங்களில் நடித்தார்.

தொடர்ந்து டப்பா கார்டெல் என்ற இந்தி வெப் சீரிஸ் ஒன்றிலும் ஜோதிகா நடித்தார். ஆனால் தமிழ் இந்தி வெப்சீரிஸ் என எதிலும் ஜோதிகாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பும் ரசிகர்களின் ஆதரவும் கிடைக்கவில்லை. இப்போது மொத்தமாக சினிமாவில் நடிக்காமல் தற்காலிகமாக ஒதுங்கி இருக்கிறார்.

சென்னையில் இருந்தால் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகமாக கிடைக்காது என்பதால் தனது குடும்பத்துடன் மும்பையில் நடிகை ஜோதிகா குடியேறினார். எனினும் இந்தியிலும் அவரால் பெரிய அளவில் வரவேற்பை பெற முடியவில்லை. எந்த படமும் வெப்சீரியலும் அவருக்கு பெரிய அடையாளத்தை வாங்கி கொடுக்கவில்லை. அதிலும் சில படங்கள் போதிய வெற்றியும் அடையவில்லை.

இதனால் தமிழ், இந்தியில் நல்ல கதைகளில் நல்ல கேரக்டர்களில் மட்டுமே நடிப்பது என்கிற முடிவில் நடிகை ஜோதிகா இருக்கிறார். இதற்காக பல கதைகள் கேட்ட அவர் இது எனக்கு செட் ஆகாது, இந்த கேரக்டர் எனக்கு ஹிட் ஆகாது என்றும் ஒதுக்கி இருக்கிறார். அவரின் 2டி நிறுவனமும் அதிக படங்களை இப்போது தயாரிப்பது இல்லை. தனது குடும்பம், குழந்தைகளின் படிப்பு, பெற்றோர் நலம் என அதில் கவனம் செலுத்தி வருகிறார். அதனால் சினிமாவை விட்டு தற்காலிகமாக ஜோதிகா விலகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சற்று முன்