- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது, இந்தியன் 2 படப்பிடிப்பில் என் அருகில் கிரேன் விழுந்து கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் என்னை வேகமாக இழுத்து காப்பாற்றினார். அந்த நிமிடத்தை நினைத்தாலே இப்போதும் உடல் நடுங்குகிறது. அந்த விபத்திலிருந்து உயிர் தப்பியது மிகப்பெரிய அதிசயமாக தோன்றியது. அதன் பிறகு கிருஷ்ண பகவானின் தீவிர பக்தையாக மாறிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். கடந்த 2020ம் ஆண்டில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது 100 அடி உயரத்தில் இருந்து கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் குறித்து காஜல் அகர்வால் அந்த நெகிழ்ந்து போய் பகிர்ந்திருக்கிறார்.





