தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நடிகை காஜல் அகர்வால் என்றால் அது மிகையல்ல. இவர் மும்பையை சேர்ந்தவர். கடந்த 2004ம் ஆண்டில் ஹோ கயா நா என்ற இந்தி படத்தில் நடித்து காஜல் அகர்வால் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 2007ம் ஆண்டில் லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் நடிகர் பரத் நடித்த பழனி என்ற படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து 22 ஆண்டுகளாக அவர் சினிமாவில் பயணித்து வருகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல மொழிகளில் தொடர்ந்து அவர் நடித்து வருகிறார்.
நடிகை காஜல் அகர்வால் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜயுடன் துப்பாக்கி ஜில்லா மெர்சல் மற்றும் கத்தி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் இது தவிர ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார். விவேகம் படத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தனுஷூடன் மாரி விஷாலுடன் பாயும் புலி ரவி மோகனுடன் கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
எந்தவிதமான கேரக்டர் என்றாலும் காஜல் அகர்வால் அதில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்துவார். குறிப்பாக அவரது சித்ரா தேவிப்பிரியா கேரக்டரை ரசிகர்களால் மறக்க முடியாது. அடுத்து வர உள்ள இந்தியன் 3 படத்திலும் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 40 வயதுகளை கடந்த நிலையிலும் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் காஜல் அகர்வால் இன்னும் இளமையும் அழகும் குறையாமல் ஒரு பொலிவான தோற்றத்தில் காணப்படுகிறார்.
தனது இளமையையும் அழகையும் குறையாமல் பாதுகாத்துக் கொள்ள கொள்வது குறித்து காஜல் அகர்வால் சமீபத்தில் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது, எனக்கு இப்போது 40 வயது ஆகிறது. பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு இடையே என்னிடம் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை செய்ய அறிவுறுத்தினார்கள். பிஸியாக இருந்தாலும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய நான் ஒருபோதும் தவறியது இல்லை.
ஒவ்வொரு நாளும் உடலுக்கு தேவையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறேன். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடுகிறேன். தேங்காய் தண்ணீர் எனது அன்றாட உணவில் நிச்சயம் இருக்கும். பழங்களில் உள்ள இயற்கையான இனிப்புகள் பச்சை காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தாவர விதைகளில் உள்ள அத்தியாவசிய கொழுப்புகள் ஆகியவற்றில் இருந்து நமக்கு தேவையான பேராற்றல் கிடைக்கிறது. நான் வயதை பொருட்படுத்துவதே இல்லை. உடற்பயிற்சியை தொடர்ந்து தவறாமல் செய்து வருகிறேன். இதுதான் எனது இளமை மற்றும் அழகின் ரகசியம் என்று காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.





