மும்பையை சேர்ந்தவர் நடிகை காஜல் அகர்வால். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள அவர், தமிழ் சினிமாவிலும் ரசிகர்களுக்கு மிகவும் அறிமுகமான நடிகையாக இருந்து வருகிறார். நடிகர் விஜயுடன் துப்பாக்கி, கார்த்தியுடன் நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 3 படத்திலும் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார்.
பாலிவுட்டைச் சேர்ந்த நடிகையாக காஜல் அகர்வால் இருந்தாலும், தமிழ் சினிமா குறித்து தொடர்ந்து தனது அபிப்ராயங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் சினிமாவில் உள்ள சுதந்திரம், கலைஞர்களுக்கு தரும் மரியாதை, நடிகைகளுக்கு தரும் முக்கியத்துவம் இந்தி சினிமா உலகில் நிச்சயம் இல்லை, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
காஜல் அகர்வாலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகி விட்டது.குழந்தையும் உள்ளது. தொடர்ந்து குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி தனது வலைதள பக்கங்களில் ஷேர் செய்து, தனது ரசிகர்களை மறக்காமல் மகிழ்ச்சிப்படுத்தியவர்.
இப்போது காஜல் அகர்வால், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 3 படத்தில் நடித்துள்ளார். அதாவது கமல்ஹாசனின் இளமைக் கால வாழ்க்கையில், அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில், மிக அற்புதமான அழகில், ஜொலிப்பில் காஜல் அகர்வால் கலந்துக்கொண்டு ரசிகர்களை அசத்தினார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது, பாலிவுட் சினிமாவுக்கும், தென்னிந்திய சினிமாவுக்கும் நிறைய பாகுபாடு இருக்கிறது. திருமணத்துக்கு பிறகும் இந்தியில் சில நடிகைகள் நடிக்கின்றனர். தீபிகா படுகோன், ஆலியாபட் போன்றவர்கள் நல்ல கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
ஆனால் தென்னிந்திய சினிமாவில் திருமணத்துக்கு பின்பு, நடிகைகளுக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் நடிகை நயன்தாரா மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார். அவருடைய படங்கள் தேர்வும், கேரக்டர், கதை தேர்வும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. திருமணமான நடிகைகளை, தென்னிந்திய சினிமா ஓரம் கட்டுகிறது. இந்த நிலையை விரைவில் மாற்றிக் காட்டுவோம், என்று பேசியிருக்கிறார்.





