- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, மூன்றே நாட்களில் டிராகன் வசூல் செய்தது இத்தனை கோடிகளா? வாயடைத்துப் போன கோலிவுட் வட்டாரம்...

என்னது, மூன்றே நாட்களில் டிராகன் வசூல் செய்தது இத்தனை கோடிகளா? வாயடைத்துப் போன கோலிவுட் வட்டாரம் – இது வேற லெவல் சம்பவமா இருக்குதே…

- Advertisement -

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி காஜல் அகர்வால் யோகிபாபு கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஆட்டோ டிரைவராக பிரதீப் ரங்கநாதன் சில நொடிகள் மட்டுமே காணப்பட்டார்.

தொடர்ந்து அவரே நாயகனாக நடித்து இயக்கிய படம் லவ்டுடே. இவானா சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. மொபைல் போனை மையப்படுத்தி அதனால் காதலர்களுக்குள் ஏற்படும் பிரச்னையை இந்த படம் காதல் காமெடி சென்டிமென்ட் கலந்து சொன்னது.

- Advertisement -

லவ்டுடே படத்துக்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து வெளியான படம்தான் டிராகன். ஓ மை கடவுளே படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கிய 2வது படம். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்த இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கல்லூரி மாணவராகவும் அனுபமா பரமேஸ்வரன் அவரது காதலியாக நடித்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார் ஆர்ஜே ஜித்து மிஷ்கின் கௌதம் மேனன் கயாடு லோஹர் இந்துமதி மரியம் ஜார்ஜ் தேனப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை கவரும் விதமான ஒரு கதைக்களத்தில் உருவாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

- Advertisement -

பள்ளியில் சிறந்த மாணவனாக விளங்கும் பிரதீப் ரங்கநாதன், கல்லூரியில் ரவுடி மாணவனாக கலாட்டா செய்து 48 அரியர் வைக்கிறார். வேலைக்கு போவதாக பெற்றோரை ஏமாற்றி நண்பர்கள் அறையில் தங்கி கும்மாளம் போட்டு, 2 ஆண்டுகளை கழிக்கும் அவரை ஒரு கட்டத்தில் காதலி கழட்டி விடுகிறார். அதனால் டிகிரி வாங்கியதாக போர்ஜரி செய்து பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேரும் பிரதீப் ரங்கநாதன், பணக்கார பெண்ணை திருமணம் செய்ய தயாராகிறார். அப்போது வசமாக கல்லூரி முதல்வரான மிஷ்கினிடம் மாட்டிக் கொள்கிறார்.

அவர் வைக்கும் ஒரு செக்கில் வேறு வழியின்றி சிக்கிக்கொள்ளும் பிரதீப் ரங்கநாதன், அந்த டாஸ்க்கில் ஜெயித்தாரா, பணக்கார பெண்ணை கரம் பிடித்தாரா என்பதுதான் கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 3 நாட்களில் டிராகன் படத்தின் வசூல் ரூ. 47 கோடியை கடந்திருக்கிறது. மிக விரைவில் ரூ. 100 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்