- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க ருசிகரமான பொய்களை போலீசார் ஏத்துக்க மாட்டாங்க, இது விளையாட்டுன்னு அப்போ தெரியலையா - வனிதா...

உங்க ருசிகரமான பொய்களை போலீசார் ஏத்துக்க மாட்டாங்க, இது விளையாட்டுன்னு அப்போ தெரியலையா – வனிதா விஜயகுமாரை விளாசி தள்ளிய நடிகை கஸ்தூரி

- Advertisement -

நடிகை வனிதா விஜயகுமார், தமிழ் சினிமாவில் ஒரு பிரபல நடிகையாக இருக்கிறார். நடிகர் விஜயகுமார் மகள் என்ற சிறப்பு அடையாளமும் இவருக்கு உள்ளது. விஜய் டிவியில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஏற்கனவே கலந்துக்கொண்டுள்ளார். இப்போது அவரது மகள் ஜோவிகா, ஒரு போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

நடிகை வனிதா விஜயகுமார், தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் ரிவ்யூ தருகிறார். அதில் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் குறித்தும் கடுமையாக விமர்சிக்கிறார். குறிப்பாக ரெட்கார்டு குறித்து பிரதீப் வெளியேற்றம் குறித்தும் அதிகமாக விமர்சனம் செய்து பேசியவர் வனிதா விஜயகுமார்தான். இந்த விஷயத்தை கமல் மீதும் விமர்சனங்களை கூறினார்.

இரண்டு தினங்களுக்கு முன், நள்ளிரவில் அவர் தனது வீட்டருகே, காரை நிறுத்திவிட்டு சென்ற போது தாக்கப்பட்டதாக, முகத்தில் காயத்துடன் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். தாக்கியவர், பிரதீப் குறித்து பேசிவிட்டு தாக்கியதாகவும், உடனே தப்பி ஓடிவிட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால் தான் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, வனிதா போலீசில் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். இதுபோன்ற சர்ச்சையான விஷயங்களில், விவகாரங்களில் தானாக முன்வந்து தனது கருத்தை முன்வைக்கும் நடிகை கஸ்தூரி, இதில் வனிதா விஜயகுமாரை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். ருசிகரமான பொய்களை போலீசார் நம்ப மாட்டார்கள் என்றும் நக்கலாக கூறியிருக்கிறார்.

நடிகை கஸ்தூரி அந்த பதிவில் கூறியிருப்பதாவது, அடித்தவர் யாரோ, அதற்கு எப்படி பிரதீப் பொறுப்பாக முடியும். இது வனிதா செய்த ரிவியூவால் வந்த வினை. வனிதாவின் ருசிகரமான பொய்கள், யூ டியூப்புக்கம், விஜய் டிவிக்கும் வேண்டுமானால் கன்டென்டாக பயன்படும். போலீசாரிடம் வியாபாரம் ஆகுமா, இதற்கு நான் அனுதாபம் காட்ட வேண்டும்.

ஆனால் இந்த நேரம் பார்த்து, மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்ற போது வனிதாவும், அவரை சார்ந்தவர்களும் மதுமிதாவை சுற்றி வளைத்தது தான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.இது வெறும் விளையாட்டு என்று அப்போது உங்களுக்கு ஞாபகத்துக்கு வரவில்லையா, உங்களுக்கு என்று இல்லை, யாருக்குமே வன்முறை நடக்க கூடாது என்று தனது பதிவில் கூறியுள்ளார் தனது கஸ்தூரி.

சற்று முன்