- Advertisement -
Homeபொழுதுபோக்குமங்காத்தாக்கு ஈடுகொடுக்கும் தீம் மியூசிக்? “தளபதி 68” படத்தை குறித்து யுவன் சொன்ன மாஸ் தகவல்

மங்காத்தாக்கு ஈடுகொடுக்கும் தீம் மியூசிக்? “தளபதி 68” படத்தை குறித்து யுவன் சொன்ன மாஸ் தகவல்

- Advertisement -

“லியோ” திரைப்படத்தை குறித்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. இதனால் ரசிகர்கள் திக்குமுக்காடி போனார்கள் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“தளபதி 68” திரைப்படத்தின் அறிவிப்பால் “லியோ” திரைப்படத்திற்கான ஆவல் குறைந்துள்ளதாக சிலர் கூறி வருகின்றனர். எனினும் லோகேஷ் கனகராஜிற்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு என்பதை பலரும் அறிவார்கள். அதுவும் “லியோ” திரைப்படம் LCU-க்குள் வருமா? வராதா? என்ற ஆர்வமும் ரசிகர்களிடையே இருப்பதால் “லியோ” திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதே சூடோடு சூடாகத்தான் இருந்து வருகிறது.

- Advertisement -

வருகிற 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு “லியோ” அல்லது “தளபதி 68” திரைப்படத்தை குறித்த அப்டேட் வெளிவரும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக “லியோ’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். ஆனால் விஜய் பிறந்தநாளுக்கு “லியோ” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளிவராது என்றே கூறப்படுகிறது. அதற்கு மாறாக “லியோ” படத்தில் இருந்து ஒரு போஸ்டர் மட்டும் வெளிவரும் என தகவல் வருகிறது.

மேலும் “லியோ” திரைப்படம் வெளிவரும் வரை “தளபதி 68” குறித்த எந்த அப்டேட்டும் வெளிவரக்கூடாது என விஜய் கூறிவிட்டாராம். ஆதலால் “தளபதி 68” திரைப்படத்தை குறித்த எந்த தகவலும் வெளிவராது என கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் “தளபதி 68” திரைப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

- Advertisement -

அப்போது அவரிடம், “தளபதி 68” திரைப்படத்தின் இசையை குறித்து கேட்கப்பட்டதாம். அதற்கு பதிலளித்த அவர், “அந்த படம் வரும்போது பாருங்க” என கூறினாராம். அதன் பின் “மங்காத்தா படத்தின் இசை மாதிரி இருக்குமா?” என கேட்கப்பட்டபோது, அதற்கு யுவன் ஷங்கர் ராஜா, “இருக்கும்” என பதிலளித்தாராம்.

 

- Advertisement -

சற்று முன்