- Advertisement -
Homeபொழுதுபோக்குகவர்ச்சியாக நடிப்பது கூட ஈஸி, ஆனா அந்த கேரக்டர்தான் ரொம்பவும் கஷ்டம் - மனம் திறந்து...

கவர்ச்சியாக நடிப்பது கூட ஈஸி, ஆனா அந்த கேரக்டர்தான் ரொம்பவும் கஷ்டம் – மனம் திறந்து பேசிய நடிகை கஸ்தூரி!

- Advertisement -

கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. அமைதிப்படை இந்தியன் ஆத்தா உன் கோவிலிலே ராக்காயி கோயில் உரிமை ஊசலாடுகிறது உடன்பிறப்பு மலை மலை உள்ளிட்ட பல படங்களில் கஸ்தூரி நடித்திருக்கிறார். எந்த கேரக்டர் என்றாலும் கஸ்தூரி அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நடிகையாக இருந்த வருகிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் கஸ்தூரி நடித்திருக்கிறார். அவ்வப்போது சமூகம் அரசியல் சார்ந்த தனது கருத்துகளை நடிகை கஸ்தூரி வெளிப்படையாக விமர்சித்து பேசி வருகிறார். சில நேரங்களில் அது பெரிய அளவில் சர்ச்சையாகி விடுவதும் அடிக்கடி நடந்திருக்கிறது.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சையாக பேசிய விவகாரம், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு விஸ்ரூபம் எடுத்தது. அதன்பின்பு ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்துக்கு பின் அரசியல் சமூகம் சார்ந்த பிரச்னைகளை பேசுவது இல்லை என்ற முக்கிய முடிவுக்கு வந்துள்ள நடிகை கஸ்தூரி இப்போது திரைப்படங்களில் நடிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் சந்தானம் நடிப்பில் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நிழல்கள் ரவிக்கு மனைவியாக நடிகை கஸ்தூரி நடித்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி கூறியதாவது, இதுவரை சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பதுதான் கஷ்டம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையிலேயே காமெடியாக நடிப்பது தான் ரொம்பவும் கஷ்டம். இதை நான் தற்போதுதான் உணர்ந்திருக்கிறேன்.

நான் என்னுடைய இத்தனை ஆண்டுகால சினிமா பயணத்தில் முதன் முறையாக காமெடி கேரக்டரில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் சந்தானத்துக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று சொன்னதும் முதலில் நான் பயந்தேன். பின்னர் கதையைக் கேட்ட பிறகுதான் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று நடிகை கஸ்தூரி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்