- Advertisement -
Homeபொழுதுபோக்குடிஎஸ்பிக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விலகிய நடிகை கீர்த்தி சுரேஷ் - இப்போது எல்லம்மா படத்தின்...

டிஎஸ்பிக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விலகிய நடிகை கீர்த்தி சுரேஷ் – இப்போது எல்லம்மா படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் நடிகராகி விடுகின்றனர். அதே போல் நடிகர்கள் இயக்குனராகி விடுகின்றனர். அந்த வரிசையில் இப்போது இசையமைப்பாளர்களும் நடிகர்களாக மாறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி ஜீவி பிரகாஷ் குமார் போன்ற இசையமைப்பாளர்கள் இப்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் பிரபல இசை அமைப்பாளர்களில் ஒருவரான தேவி ஸ்ரீ பிரசாத் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். டிஎஸ்பி என அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் தெலுங்கில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர். பல நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர்.

- Advertisement -

இப்போது எல்லம்மா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக டிஎஸ்பி அறிமுகமாகிறார். பலகாம் என்ற படத்தை தெலுங்கில் இயக்கிய வேணு எல்டண்டாடி இந்த படத்தை இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில்ராஜூ சிரிஷ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

எல்லம்மா படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் பார்சி என்ற கதாபாத்திரத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் தெலுங்கு தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகிறது. இது கடவுளை மையப்படுத்திய ஒரு கதைக்களத்தில் உருவாவதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

எல்லம்மா படத்தில் முதலில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்பட்டது. அவரும் கதை கேட்டு தனது கேரக்டர் மிகவும் பிடித்து போன நிலையில் இந்த படத்தில் நடிக்க கமிட் ஆனார். ஆனால் படத்தின் நாயகன் நானி என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஹீரோ டிஎஸ்பி என்று மாறியதால் அவர் இந்த படத்தில் விலகியுள்ளார். அறிமுக நாயகனுடன் ஜோடி சேர அவர் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இப்போது அவருக்கு பதிலாக சாய்பல்லவி உள்ளிட்ட சில நடிகைகளிடம் எல்லம்மா படக்குழு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் தற்போது எல்லம்மா படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். காந்தா படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருக்கிறார். இப்போது எல்லம்மா படத்திலும் பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்