மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகள் பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெரும் ஆதரவையும் பெற்று இருக்கின்றனர். சமீபத்தில் கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் ,தமிழில் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக அண்ணாத்த, பைரவா, சர்க்கார், ரெமோ, ரஜினி முருகன், சைரன் 108, சாமி 2, நடிகையர் திலகம், தொடரி உள்ளிட்ட பல படங்களில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த ரகு தாத்தா படமும் ரசிகர்களின் கவனம் பெற்ற படமாக இருந்தது.
நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ ஆகிய 2 படங்களில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருந்தார். இந்த 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அண்ணாத்த படம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.
கீர்த்தி சுரேஷ் கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் அதிகளவில் நடிப்பவர். ஏனெனில் அவரது நடிப்பு மிகச் சிறப்பாகவும், அழுத்தமாகவும் இருப்பதால் கதாநாயகி மையப்படுத்திய படங்களில் நடிக்க கீர்த்தி சுரேஷை கமிட் செய்கின்றனர். தமிழில் நயன்தாரா, திரிஷா வரிசையில் கீர்த்தி சுரேஷூம் இருந்து வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன், அயலான் படத்தை தொடர்ந்து இப்போது அவரது நடிப்பில் அமரன் என்ற படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அத்துடன் ஏஆர் முருகதாஸ் இயக்கும் ஒரு படத்திலும் அவர் இப்போது நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தி கோட் படத்தில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில், விஜயுடன் ஒரு காட்சியில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் பேசியிருக்கிறார். அவர் ஒரு நேர்காணலில் பேசும்போது, நடிகர் சிவகார்த்திகேயனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதாவது அவர் ஒரு நாளில் தனது 3 குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறார் அது எவ்வளவு கலகலவென இருக்கும் என்பதை நான் தெரிந்து கொள்ள மிகவும் ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.





