- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படங்களை பார்க்கும் போது சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விடலாம் என்று தோன்றுகிறது -...

அந்த படங்களை பார்க்கும் போது சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விடலாம் என்று தோன்றுகிறது – ஒபனாக பேசிய ஆடுகளம் பட நடிகை டாப்ஸி!

- Advertisement -

இந்தி சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி பன்னு. இவர் தமிழில் நடிகர் தனுஷூடன் ஆடுகளம் நடிகர் அஜீத்குமாருடன் ஆரம்பம் ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் டாப்ஸி நடித்திருக்கிறார். அடிக்கடி இந்தியில் உள்ள சில பிரபல நாயகிகள் குறித்து டாப்ஸி விமர்சிப்பதும் அதற்கு அவர்கள் பதிலடி தருவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை டாப்ஸி நடித்த காந்தாரி திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் டாப்ஸி பங்கேற்று பேசி வருகிறார் அப்போது அவர் கூறியதாவது, எனக்கு கொஞ்சம் லைட்டான கதாபாத்திரத்தை கொடுங்கள் என்று இயக்குனர்களிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

- Advertisement -

ரொமான்டிக் காமெடி படத்தில் நடிக்க எனக்கும் ஆசை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வகையான கேரக்டரில் நடிகர் ஒருவர் சிறப்பாக நடித்து விட்டால் அதே மாதிரியான கதாபாத்திரங்களிலேயே அவர்களைத் தொடர்ந்து நடிக்க வைக்கும் போக்கு திரை உலகில் இருக்கிறது.

ஒரு நடிகரை குறிப்பிட்ட கதாபாத்திரங்களுக்குள் மட்டுமே அடைத்து விடுவது திரை உலகின் படைப்பாற்றல் பற்றாக்குறையை காட்டுகிறது. மாறுபட்ட கதாபாத்திரங்களில் எனக்கு நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். சமீப காலத்தில் வெளியாகும் சில குறிப்பிட்ட வகை படங்களை பார்க்கும்போது அதிகப்படியான வன்முறை மற்றும் பார்வையாளர்களே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் காட்சிகள் டிரண்டிங் ஆகி வருகின்றன.

- Advertisement -

அத்தகைய படங்களுக்கு ஒரு தரப்பு ரசிகர்கள் இருக்கலாம் என்றாலும் கூட அது போன்ற படங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. இந்த படங்களை பார்க்கும்போது என் குடும்பத்தினரிடம், நானே கூட நான் ஓய்வு பெறும் காலம் வந்து விட்டதா என்று யோசித்ததாக கூறினேன்.

உண்மைதான். அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்கு பதிலாக சினிமாவிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற்றுவிடலாம் என்று நடிகை டாப்ஸி வெளிப்படையாக கூறியிருக்கிறார். வன்முறை படங்களில் நடித்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதை விட சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கிப் போய் விடலாம் என்ற அவரது கருத்தில் ரசிகர்களின் மீதான அக்கறை வெளிப்படுகிறது என்று அவரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்