ஒரு திரைப்பட இயக்குனர் அவர் டைரக்ட் செய்யும் படத்தில் ஹீரோ ஹீரோயின் இடையே ஏற்படும் காதலை மிக சுலபமாக திரையில் காட்சிப்படுத்தி விடுகிறார். பொல்லாதவன் அசுரன் விடுதலை ஆடுகளம் போன்ற வெற்றிமாறன் படங்களில் ஆக்சனுக்கு இடையே மெல்லிய காதல் கதையும் இருக்கும்.
இயக்குனர் வெற்றிமாறன் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு பூந்தென்றல் என்ற ஒரு மகள் உள்ளார். இயக்குனர் வெற்றிமாறனின் மனைவி ஆர்த்தி நேர்காணல் ஒன்றில் தனது காதல் வாழ்க்கை, வெற்றிமாறன் சந்திப்பு குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அந்த நேர்காணலில் ஆர்த்தி வெற்றிமாறன் கூறியதாவது, அவரை நான் முதன் முதலாக சென்னையில் உள்ள ஒரு தேநீர் கடையில் தான் சந்தித்தேன். ஆனால் அவர் என்னை கண்டு கொள்ளவே இல்லை. சில நாட்களில் எனக்கு அவரை பிடித்து போனது. முதன் முதலில் நான்தான் அவரிடம் என்னுடைய காதலை சொன்னேன்.
ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள 10 ஆண்டுகள் நீங்கள் காத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் சரி என்று கூறினார். நானும் சரி என்று அதற்கு ஒத்துக் கொண்டேன். அது மட்டுமில்லாமல் அவர் உனக்கு திடீரென்று மனசு மாறினால் நீ வேறு ஒரு கல்யாணம் செய்து கொள். எனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறினார்.
பின் நாங்கள் இருவரும் காதலிக்க தொடங்கினோம். எனக்கு ஐதராபாதில் வேலை கிடைத்தது. என்னால் அவரை விட்டு பிரிந்து இருக்க முடியாமல் வேலைக்கு போக மாட்டேன் என்று சொன்னேன். அதற்கு அவர் உன்னுடைய கனவையும், என்னுடைய கனவையும் இந்த காதல் கலைப்பதாக இருந்தால் நாம் காதலிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.
அவர் அப்படி சொன்னதால் உடனே நான் வேலைக்கு சென்று விட்டேன். அவர் அப்படி சொன்னதால் தான் இன்று நான் என்னுடைய கம்பெனியில் ஜெனரல் மேனேஜராக இருக்கிறேன். அவர் சொன்னதை போல் 8 ஆண்டுகளுக்கு பிறகு தான் எங்கள் திருமணம் நடந்தது என்று அந்த நேர்காணலில் ஆர்த்தி கூறியிருக்கிறார்.





