தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் குஷ்பு. பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த குஷ்பு தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் படங்களிலும் நடித்தார். வயது 54 கடந்த நிலையிலும் இப்போது படங்களில் அம்மா அக்கா அண்ணி சித்தி அத்தை கேரக்டர்களில் குஷ்பு நடித்துக்கொண்டு இருக்கிறார்.
உடல் பருமன் தோற்றம் கொண்டவராக இருந்த குஷ்பு, சமீபகாலமாக ஸ்லிம் ஆக மாறிவிட்டார். அவரது எடை குறைப்பு ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை தந்துள்ளது. எப்படி இப்படி ஸ்லிம் ஆக மாறினீர்கள் என்று தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜீனஸ் பேண்ட், வெள்ளை சட்டை அணிந்த நிலையில் தனது லேட்டஸ்ட் செல்பி புகைப்படங்களை பதிவு செய்த நடிகை குஷ்புவிடம், நீங்கள் ஸ்லிம் ஆக மாறியது எப்படி என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதற்கு அந்த புகைப்படங்களின் கீழ் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, உடல் எடையை குறைக்கும் இந்த பயணம் அற்புதமாக இருந்தது. சில நேரங்களில் சோதனையாகவும் சோர்வாகவும் இருந்தது. ஆனால் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் பொறுமை மற்றும் விடாமுயற்சி மனப்பான்மையை கைவிடாதீர்கள்.
ஒரு குறிக்கோளுடன் நடந்து செல்லுங்கள். உங்கள் இலக்கை நோக்கி கவனம் செலுத்துங்கள். வெற்றி நிச்சயம். உங்களை தேடி வரும் பாதுகாப்பின்மையை அதிகரித்து அனுமானங்களுடன் வாழ்பவர்களுக்கு வயித்தெரிச்சல் இருக்கும் எனக்கு முழுமையாக புரிகிறது.
உங்களுக்கு உதவ நான் செய்யக்கூடிய ஒரு நல்ல அமிலத்தன்மை எதிர்ப்பு மருந்தை பரிந்துரைப்பது, கடினமாக உழைக்கச் சொல்வது மட்டுமே என்று நடிகை குஷ்பு அதில் பதிவிட்டுள்ளார். அதாவது கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது உடலில் நல்ல அமிலத்தன்மை எதிர்ப்பு ஏற்படும். அதுவே உடல் எடையை குறைக்கும் மருந்தாகும் என்று நடிகை குஷ்பு கூறியிருக்கிறார்.





