- Advertisement -
இந்தியில் பிரபலமான நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை. அதன்பிறகு கேஜிஎஃப் நாயகன் யஷ் நடித்த டாக்ஸிக் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். அந்த படமும் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதுகுறித்து நடிகை கியாரா அத்வானி கூறுகையில், டாக்ஸிக் படத்தின் வெற்றி தோல்வியை தாண்டி நதியா என்ற அந்த கதாபாத்திரம் எனக்கு ஸ்பெஷல் என்று பெருமையாக கூறியிருக்கிறார்.





