இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான படம் ஜெமினி. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர் கிரண் ரத்தோட். வடமாநில பெண் கேரக்டரில் நடித்த அவர், சியான் விக்ரமை இந்த படத்தில் காதலிப்பார். மாடர்ன் டிரஸ்சில் அழகாக நடித்து அசத்தியிருப்பார். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற கட்ட கட்ட கட்ட கட்ட நாட்டுக்கட்ட பாடல், அப்போது செம டிரண்டிங் ஆக இருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற படங்களில் நடித்தார் கிரண். குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் அன்பே சிவம் படத்தில், நாசர் மகளாக, கமல் ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் படத்தின் இறுதிக்காட்சியில் மாதவனை திருமணம் செய்துக்கொள்வார். இதில் பூ வாசம் வீசும் கண்ணே, நீ பூ வரைந்தால் என்ற பாடல் காட்சியில் கமலுக்கும், கிரணுக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும்.
வில்லன் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் பெரிய அளவில் அவருக்கு நடிக்க வாய்ப்பில்லை என்றாலும், அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் நடித்த வின்னர் படத்தில் நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் இருந்தது. ஆனால் இந்த படத்தில் சில காட்சிகளில் எக்கச்சக்கமான கிளாமரில் கிரணை நடிக்க வைத்திருந்தார் டைரக்டர் சுந்தர் சி. கிரண் ரத்தோடு கதாநாயகியாக இருந்து கவர்ச்சி நாயகியாக மாறியதற்கு இந்த வின்னர் படம்தான் முக்கிய காரணம்.
அதன்பிறகு கிரண் ரத்தோடுக்கு தமிழில் கதாநாயகி வாய்ப்புகள் வராத நிலையில் தெலுங்கு, கன்னட மொழிகளில் வாய்ப்பு தேடினார். அங்கும் கவர்ச்சி நாயகி வாய்ப்புகளே அதிகமாக வந்தன. இந்த காலகட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால், தனியாக ஒரு செயலி துவங்கி, அதில் தனது ரசிகர்களை வீடியோவில் சந்திக்க தனி கட்டணம் நிர்ணயித்தார் கிரண் ரத்தோட்.
இதில் சினிமாவில் காட்டுகிற கவர்ச்சியை வீடியோவில் ரசிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் காட்டும் புதிய முறையை கொண்டு வந்தார். செக்ஸியாக பேச ஒரு கட்டணம், செக்ஸியாக வீடியோவில் வர ஒரு கட்டணம் என அவர் அந்த செயலியை பயன்படுத்திய பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின்பு அந்த செயலி முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை கிரண் ரத்தோட், நான் நம்பிய பலரும் என்னை ஏமாற்றி விட்டனர். சுந்தர் சி இயக்கிய அன்பே சிவம், வின்னர், ஆம்பள படங்களில் நடித்தேன். என்னை அவரது படங்களில் கவர்ச்சி நடிகையாக மாற்றி விட்டார். ஆம்பள படத்தில் அவர் அழைக்கிறார் என்றுதான் போனேன். ஆனால் என்னை அங்குள்ள செட் பிராப்பர்ட்டி போல பயன்படுத்தி விட்டார். சுந்தர் சியுடன் முத்தின கத்திரிக்காய் படத்திலும் நடித்திருந்தேன். அவர் படங்களில் நடித்த எனக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை என்று புகார் கூறியிருக்கிறார் கிரண் ரத்தோட்.





