- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் நடித்தபோது நடிகர் கருணாஸ் அதற்காக ப்ளீஸ் ப்ளீஸ் என்று என்னிடம் கெஞ்சினார் -...

அந்த படத்தில் நடித்தபோது நடிகர் கருணாஸ் அதற்காக ப்ளீஸ் ப்ளீஸ் என்று என்னிடம் கெஞ்சினார் – உண்மையை போட்டுடைத்த நடிகை லைலா!

- Advertisement -

ஆரம்பத்தில் கானா பாடகராக இருந்தவர் கருணாஸ். அவரை தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாலா. அவரது இயக்கத்தில் நந்தா என்ற படத்தில் கருணாஸ் காமெடி ரோலில் லொடுக்கு பாண்டி என்ற திருடன் கேரக்டரில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றார்.

தொடர்ந்து பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்த கருணாஸ் அதன்பிறகு அம்பாசமுத்திரம் அம்பானி திண்டுக்கல் சாரதி போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் அரசியல் கட்சி துவங்கிய அவர் அதிமுக ஆட்சி காலத்தில் முதலவராக ஜெயலலிதா இருந்த போது எம்எல்ஏவாகவும் இருந்தார்.

- Advertisement -

அதன்பிறகு திமுக ஆதரவாளராக மாறிய நடிகர் கருணாஸ், கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஒருமுறை அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த போது நடந்த சம்பவம் ஒன்றில் நடிகர் கருணாஸ் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் பிதாமகன் நந்தா உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை லைலா. கள்ளழகர் அவர் நடித்த முதல் படம். மேலும் பார்த்தேன் ரசித்தேன் ரோஜாவனம் தில் தீனா அள்ளித்தந்த வானம் உன்னை நினைத்து மௌனம் பேசியதே பரமசிவன் கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல படங்களில் லைலா நடித்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை லைலா கூறியதாவது, மௌனம் பேசியதே படத்தில் கடைசி காட்சியில் ஒரு காரில் நான் வருவேன். அந்த கார் ஒரு நடிகருக்கு சொந்தமானது. அந்த ஆர்ட்டிஸ்ட் யாருன்னு கண்டுபிடிங்க. நந்தா படம் மெளனம் பேசியதே அந்த 2 படங்களிலும் அந்த நடிகர் இருக்கிறார்.

நந்தா படத்திலும் ஒரே குடும்பம்தான். மௌனம் பேசியதே படத்திலும் ஒரே குடும்பம்தான். அந்த 2 குடும்பத்திலும் இருந்த ஒரே நடிகர் தான். ஆனால் சூர்யா இல்லை. அந்த கார் கருணாஸ் உடையதுதான். ப்ளீஸ் மா ப்ளீஸ். இது என்னோட வண்டி. நான் மிகவும் விரும்பி வேண்டி வாங்கிய கார் என்று என்னிடம் கருணாஸ் பலமுறை பரிதாபமாக கேட்டுக்கொண்டார். எனக்கு சிரிப்பாக இருந்தது என்று நடிகை லைலா அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்