- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படத்தில் மிக முக்கிய பிரச்னையாக இருப்பது இதுதான், படத்தில் இதை செய்திருக்கலாம் -...

இந்தியன் 2 படத்தில் மிக முக்கிய பிரச்னையாக இருப்பது இதுதான், படத்தில் இதை செய்திருக்கலாம் – கமல்ஹாசனின் மாஜி கதாநாயகி அம்பிகா சொன்ன ஐடியா!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல. ஏனென்றால் உலக தரத்தில் ஒரு சிறந்த கலைஞராக அவர் இப்போதும் போற்றப்படுகிறார். நடிப்பை பொருத்த வரை கமல்ஹாசன் 70 வயதை நெருங்கும் நிலையிலும் இன்னும் டெடிகேஷனாக இருக்கிறார். இந்தியன் 2 படத்துக்காக தனது கடுமையான உழைப்பை தந்திருக்கிறார்.

இந்தியன் 2 படத்துக்காக 40 நாட்கள், காலை முதல் இரவு வரை குடிநீர், பழச்சாறு குடித்து மட்டுமே கடுமையாக உழைத்து இந்தியன் தாத்தா கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்தியன் 2 படத்தை விமர்சித்து குறை சொல்லும் ரசிகர்கள் கூட, ஷங்கர் திரைக்கதை மோசம், அனிருத் இசை மோசம் என்று கூறுகிறார்களே தவிர, கமல் நடிப்பை இதுவரை யாருமே குறை சொல்லவில்லை.

- Advertisement -

இந்தியன் 2 படத்தை பொருத்தவரை படத்தில் ரசிகர்களின் மிகப்பெரிய குறையாக பார்ப்பது, படத்தின் நீளம்தான். 3 மணி நேரம் நான்கு நிமிடங்கள் திரையில் படம் ஓடியது, ரசிகர்களை கதற வைத்துவிட்டது. ஏனென்றால் இப்போதைய படங்கள் எல்லாம், அதிக பட்சம் இரண்டேகால் மணி நேரத்தை கடப்பது இல்லை. அவ்வளவு நேரம்தான் ரசிகர்களின் பொறுமையை சோதிக்க முடியும்.

ஆனால் சில இயக்குனர்கள் அதிக நேரம் படம் ஓடினால், பெரிய அளவில் சிறந்த படமாக ரசிகர்களை கவர்ந்து விடும் என்று தப்புக்கணக்கு போடுகின்றனர். படத்தின் நீளம் முக்கியமல்ல, படத்தில் அடுத்தடுத்து வரும் விறுவிறுப்பான காட்சிகள்தான் முக்கியம். படத்தின் நீளமே மனதளவில் ரசிகர்களை விரைவில் சோர்வடைய செய்துவிடும் என்ற லாஜிக்கை கூட இயக்குனர் ஷங்கர் யோசிக்கவில்லையா என்றுதான் கேள்வி எழுப்புகின்றனர்.

- Advertisement -

இதுமட்டுமின்றி, ஒரு படத்தின் 2ம் பாகத்தை எடுக்கும்போதே 3ம் பாகத்தையும் அதிலேயே எடுப்பது பலவிதங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும், படத்துக்கு சரியான தொடர்ச்சி கிடைக்காது. சில காட்சிகள் சொதப்பலாகவும் மாறிவிடும். கதையின் போக்கு வேறு மாதிரி ஆகிவிடும் என்ற விஷயங்களையும் ஷங்கர் இதில் கோட்டை விட்டுவிட்டதாக ரசிகர்கள் புலம்புகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுடன் காக்கிச் சட்டை, காதல் பரிசு, சகலகலா வல்லவன், உயர்ந்த உள்ளம், விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை அம்பிகா, இந்தியன் 2 படம் குறித்து விமர்சித்துள்ளார். அம்பிகா கூறுகையில், இந்தியன் 2 படம் பார்த்தேன், படம் எனக்கு பிடித்திருந்தது. அதே சமயம் படத்தின் நீளம்தான் பிரச்னையாக எனக்கு தெரிந்தது. அவர்கள் படத்தின் நீளத்தை இன்னும் 12 முதல் 15 நிமிடங்கள் வரை குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது, என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்