- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு நல்ல நடிகை இப்படி பண்ணலாமா? மலேசியா படப்பிடிப்பு தளத்தில் நடிகை லட்சுமி மேனன் அடாவடி...

ஒரு நல்ல நடிகை இப்படி பண்ணலாமா? மலேசியா படப்பிடிப்பு தளத்தில் நடிகை லட்சுமி மேனன் அடாவடி – அதிரடியாக செயல்பட்ட இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி மேனன். குறிப்பாக அவர் நடித்த சுந்தரபாண்டியன் கும்கி கொம்பன் ரெக்க பாண்டியநாடு உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. குடும்பப் பாங்கான தோற்றத்தில் லட்சுமி மேனன் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல பாராட்டை பெற்றுத் தந்தது.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு லட்சுமி மேனன் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. குறிப்பாக சில படங்களில் அவர் உடல் பருமனான தோற்றத்தில் காணப்பட்டதால் அவரது நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அதனால் அவர் தமிழில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை இழந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விதார்த் நடிக்கும் ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மலேசியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் லிங்குசாமி தயாரிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக ரக்சிதா மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் கமிட் செய்யப்பட்டு அவர்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் லிங்குசாமி தயாரிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் கும்கி. அதனால் அந்த படத்தின் நாயகியான லட்சுமி மேனனை இந்த படத்தில் அவர் நடிக்க வைத்துள்ளார். ஆனால் மலேசியாவில் நடந்து வரும் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகை லட்சுமி மேனன் தினமும் சரியான நேரத்துக்கு வருவதில்லை. அவருக்கு இஷ்டப்பட்ட நேரத்தில் வந்திருக்கிறார்.

- Advertisement -

மலேசியாவில் நடந்து வரும் படப்பிடிப்பு என்பதால் தினசரி செலவுகள் அதிகரிக்கும். மேலும் லட்சுமி மேனன் மிகவும் தாமதமாக நினைத்த நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதால் இயக்குனர் பலமுறை அவரிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாத லட்சுமி மேனன் படப்பிடிப்புக்கு சரியாக வரவே இல்லை.

பொறுத்து பொறுத்து பார்த்த அந்த படத்தின் இயக்குனர் ஒரு கட்டத்தில் இந்த படத்தில் ரக்சிதா ஒருவர் மட்டுமே போதும். நீங்கள் இந்த படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டாம் என்று கூறி லட்சுமி மேனனை அந்த படத்தில் இருந்தே நீக்கி விட்டாராம். அதனால் அவர் அந்த படத்தில் நடிக்காமல் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கிடைத்த ஒரு படத்திலும் இப்படி நடிக்காமல் சொதப்பி விட்டாரே என அவரது ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்