- Advertisement -
மலையாளம் தமிழ் படங்களில் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகை மமிதா பைஜூ இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான ஜெய் அனுமன் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அந்த படத்தில் நேரடியாக தெலுங்கு திரை உலகில் காலடி எடுத்து வைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் ஏற்கனவே இணைந்து விட்டதாக ஒரு தகவல் வெளியான போதிலும் இனிமேல் தான் படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





