தமிழ் சினிமாவில் 1990களில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகைகள் என சிலர் மட்டுமே இருப்பார்கள். அவர்களில் ஒருவர்தான் மீனா. அவரது அழகான முகமும், தோற்றமும், வாளிப்பான தேகமும் சகலவிதமான ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதனால்தான் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக், அர்ஜூன் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் மீனா ஜோடியாக நடித்தார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் மீனாவுக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகளும் வந்தன.
மீனா, தமிழில் பல படங்களில் அதீத கவர்ச்சியில் நடித்திருக்கிறார். குறிப்பாக தெலுங்கு படங்களில் மீனா எல்லையற்ற கவர்ச்சியில் பாடல் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்றாலும் அவர் மீது கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்படவில்லை. எனினும் பல நல்ல கேரக்டர்களிலும் மீனாவுக்கு நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் மீனா மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டார். அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம், ரசிகர்களையும் தமிழ் திரையுலகினருக்கும் பெரிய அதிர்ச்சியை தந்தது. மீனாவுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் தெறி படத்தில் விஜயுடனும், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் அரவிந்த் சாமியுடனும் மகளாக நடித்திருந்தார்.
மீனாவின் கணவர் மறைவுக்கு பிறகு, சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடிகை மீனா 2வது திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார் என்ற என்ற தகவல் பரவி வருகிறது. நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவை பிரிவதால் அவரைதான் திருமணம் செய்துக்கொள்வார் என்றும் வதந்தி பரப்புகின்றனர். முன்னாள் இயக்குனரை திருமணம் செய்துக்கொள்வார் என்றும் புரளியை பரப்புகின்றனர்.
ஆனால், நடிகை மீனா இதுகுறித்து ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார். என் கணவர் நினைவு எப்போதும் என்னை விட்டு போகாது. அதனால் 2வது திருமணம் குறித்து யோசிக்க கூட நான் விரும்பவில்லை. என் மகளின் எதிர்காலம், சினிமா தொழில் இரண்டு மட்டுமே எனக்கு முக்கியம் என்று கூறியிருந்தார். தொடர்ந்து அவரது 2வது திருமணம் குறித்த வதந்தி அதிகரித்து வருவது குறித்து, சமீபத்தில் காட்டமாக பதிவிட்டுள்ள நடிகை மீனா, வெறுப்பாளர்களால் வதந்தி உருவாக்கப்படுகிறது. முட்டாள்களால் பரப்பப்பட்டு முட்டாள்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, என்று அதில் மீனா கூறியுள்ளார்.





