- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னால் கடந்த காலத்தை மாற்ற முடியாது, தயவு செய்து அதை செய்து விடாதீர்கள் - வேண்டுகோள்...

என்னால் கடந்த காலத்தை மாற்ற முடியாது, தயவு செய்து அதை செய்து விடாதீர்கள் – வேண்டுகோள் வைத்த மாஜி நாயகி மும்தாஜ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் டி ராஜேந்தர் அறிமுகம் செய்த நடிகை மும்தாஜ். கடந்த 1999ம் ஆண்டில் மோனிஷா என் மோனாலிஷா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பல படங்களில் இரட்டை நாயகிகளில் ஒருவராக நடித்தார். சில படங்களில் வில்லி கேரக்டரிலும் நடித்தார். காமெடி காட்சிகளிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு நடிகையாக 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்தும் மும்தாஜ் பெரிய அளவில் நடிப்பில் சாதிக்க முடியவில்லை. முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி சேர முடியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே தமிழ் சினிமா அவரை ஒரு கிளாமர் நடிகையாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குஷி சாக்லேட் வேதம் லூட்டி மலபார் போலீஸ் ஏழுமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்த மும்தாஜ், விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் 2018ம் ஆண்டில் சீசன் 2ல் கலந்துக்கொண்டார். இவர் கடைசியாக 2013ம் ஆண்டில் அத்தடிண்டிகி தாரீடி என்றதெலுங்கு படத்தில் நடித்தார். அதன்பிறகு நடிப்பை விட்டு விலகி, ஆன்மிக நாட்டத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அடிக்கடி மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் மும்தாஜ், சமீபகாலமாக முழு நேர ஆன்மீகவாதியாக மாறிவிட்டார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை மும்தாஜ் கூறியதாவது, நான் சிறுவயதில் என்னுடைய மதப் புத்தகமான குர்ஆனில் என்ன உள்ளது என்று தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன். அதனை படித்திருந்தாலும் அதன் அர்த்தங்கள் எனக்கு அப்போது தெரியவில்லை.

- Advertisement -

இன்றைக்கு நான் இப்படி மாறி உள்ளேன் என்றால் குர்ஆனில் எனக்கு சொல்லப்பட்டது என்ன என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். எனது கடந்த காலத்தை என்னால் மாற்ற முடியாது. எனவே நான் எனது நிகழ் காலத்தில் அல்லாவுக்கு நெருக்கமானவளாக இருக்க முயற்சிக்கின்றேன்.

நான் அனைவருக்கும் வைக்கும் ஒரு கோரிக்கை என்னவென்றால், நான் இறந்த பின் எனது அசிங்கமான அதாவது கவர்ச்சியான, கிளாமரான எனது புகைப்படங்களை பகிர வேண்டாம். எனது கடைசி ஆசையாக இதனை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எனது அசிங்கமான புகைப்படங்களை பகிர்ந்தால் அது எனது மரணத்துக்கு பிறகும் எனக்கு வலியை கொடுக்கும், என்று மும்தாஜ் பேசியுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்