- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜாவை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவரது வாழ்க்கை கதையில் அந்த கேரக்டரில் நடிக்கப் போகிறாரா?...

இளையராஜாவை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவரது வாழ்க்கை கதையில் அந்த கேரக்டரில் நடிக்கப் போகிறாரா? – ரசிகர்கள் இதை ஏத்துக்குவாங்களா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களால் ஒருவராக இருப்பவர் தனுஷ். இப்போது அவரது நடிப்பில் உருவான குபேரா படமும் அடுத்து அவரது இயக்கத்தில் உருவான இட்லி கடை படமும் வெளிவர இருக்கிறது. இதற்கிடையே அவர் இந்தியில் தேரோ இஸ்க் மெயின் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களில் அவர் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார்.

நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி பாடகர் தயாரிப்பாளர் என்ற நிலைகளை அடுத்து இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் அடுத்து இட்லி கடை என இதுவரை 4 படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். அடுத்ததாக அஜீத்குமார் நடிக்கும் ஒரு படத்தையும் தனுஷ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகர் தனுஷை பொருத்த வரை சினிமாவில் நல்ல கலைஞராக தன்னை வெளிப்படுத்தி கொண்டாலும் சொந்த வாழ்க்கையில் பலவிதமான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளானவர். தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சமீபத்தில்தான் விவாகரத்து செய்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்ற அந்தஸ்தை இழந்தார்.

மேலும் சக நடிகைகளுடன் பலருடன் நடிகர் தனுஷ் இணைத்து பேசப்பட்டு வருவது பல ஆண்டுகளாக தொடர்கிறது. நடிகைகள் ஸ்ருதிஹாசன் அமலாபால் ராஷிகண்ணா தமன்னா என இதில் பல நடிகைகள் பெயரும் அடிபடுகின்றன. அத்துடன் ஜெயம் ரவி – ஆர்த்தி பிரிவின் பின்னணியில் கூட நடிகர் தனுஷ் பெயரை கூறியிருக்கிறார் பாடகி சுசித்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தை இயக்கிய இயக்குனர் ஓம் ராவத் இயக்கும் புதிய படத்தின் பெயர் கலாம். முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு படம் இது. இந்த படத்தில் கலாம் கேரக்டரில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஏற்கனவே இசைஞானி இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிப்பதையே ஒரு தரப்பு ரசிகர்கள் விரும்பவில்லை. இதில் மக்கள் ஜனாதிபதியாக மக்களால் கொண்டாடப்பட்ட ஒழுக்க சீலராக பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ்ந்தவர் கலாம். பண்பில் உயர்ந்த மனிதராக உலகம் போற்றும் ஒரு தலைவனாக கொண்டாடப்பட்ட அப்துல் கலாம் கேரக்டரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகர் தனுஷ் நடிப்பது ரசிகர்களை அதிருப்தியடைய செய்திருக்கிறது. இந்த படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்