- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா, சிவகார்த்திகேயன் படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் கவின்... ரசிகர்கள் ஏற்பார்களா என்பதே இங்கு கேள்வி...

சூர்யா, சிவகார்த்திகேயன் படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் கவின்… ரசிகர்கள் ஏற்பார்களா என்பதே இங்கு கேள்வி…

- Advertisement -

டாடா திரைப்படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஸ்டார். பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இளன் தான் இந்த படத்தை எடுத்திருந்தார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கிட்டத்தட்ட படத்தின் சூட்டிங் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றது.

 

படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரிசல்ட் அந்த அளவு எடுபடவில்லை. வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் படத்தில் அதிகம் இருப்பதாக பலரும் கமெண்ட் செய்தனர். இப்படி கலவையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்ததால், ஸ்டார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

 

இருப்பினும் வசூல் ரீதியாக அந்த திரைப்படம் எந்த குறையையும் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க கவினுக்கு அடுத்தடுத்த படங்கள் குவிந்து வருகின்றன. ஏராளமான திரைப்படங்களில் அவர் கமிட்டாகி இருக்கிறார். இந்த வரிசையில் அவருக்கு அடுத்ததாக கிஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

 

இதனை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையில் ரொமான்ஸ் கலந்த காமெடி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிளடி பக்கர் படம் வெளியாகிறது. இதனை இயக்குனர் நெல்சன் தயாரித்து உள்ளார். நெல்சனிடம் உதவியாளராக இருந்தவர் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதன் போஸ்டரே ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது.

 

இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து கவின் அடுத்ததாக நடித்த வரும் திரைப்படத்தின் பெயர் மாஸ்க். வெற்றிமாறன் தான் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர். படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆண்ட்ரியாவுக்கு வில்லி கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்கத்திலும் களம் இறங்குகிறார் கவின். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளாராம்.

 

இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் கவின் இரண்டு முக்கிய திரைப்படங்களின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதில் ஒரு திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல். சூர்யா ஜோதிகா பூமிகா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கியிருந்தார். தற்போது அவரே இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருக்கிறார். இதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகத்திலும் கவின் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த திரைப்படங்கள் கவினுக்கு செட்டாகுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சற்று முன்