- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல் மனைவியை சரத்குமார் பிரிய அவர்தான் காரணமா? - 50 வயது கடந்தும் முரட்டு சிங்கிளாக...

முதல் மனைவியை சரத்குமார் பிரிய அவர்தான் காரணமா? – 50 வயது கடந்தும் முரட்டு சிங்கிளாக வாழும் பிரபல நடிகை மீது எழுந்த பகீர் குற்றச்சாட்டு!

- Advertisement -

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் முதலில் தயாரிப்பாளராக இருந்தார். புரியாத புதிர் கண் சிமிட்டும் நேரம் போன்ற படங்களில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார். பிறகு ராஜா கைய வெச்சா படத்தில் வில்லன் கேரக்டரில் சரத்குமார் நடித்திருந்தார். அதன்பிறகு நடிகர் விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படத்தில் வில்லனாக சரத்குமார் நடித்த நல்ல வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சேரன் பாண்டியன் படத்தில் கதாநாயகனாக நடித்த சரத்குமார் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்தார். பெரிய கவுண்டர் பொண்ணு சாமுண்டி நாட்டாமை நட்புக்காக சூரியவம்சம் போன்ற படங்களால் முன்னணி நட்சத்திர நாயகனாக மாறினார். அதன்பிறகு சமீபகாலமாக பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இப்போது நடிகர் சரத்குமார் 70 வயது கடந்தும் இன்னும் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் படத்தை தொடர்ந்து அவர் கொம்பு சீவி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்திருக்கிறார்.

நடிகர் சரத்குமார் முதலில் மும்பையில்தான் இருந்தார். அப்போது கடந்த 1984ம் ஆண்டில் சாயாதேவி என்பவரை சரத்குமார் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் வரலட்சுமி தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் 1990களின் இறுதிகளில் நடிகை நக்மாவுடன் சரத்குமார் சில படங்களில் நடித்த போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகினர். இந்த பிரச்னையால் சாயாதேவி, சரத்குமார் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். கடந்த 2000ம் ஆண்டில் அவர்கள் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.

சரத்குமார் – சாயாதேவி பிரிவுக்கு நக்மாதான் காரணம் என அப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. அதனால் சரத்குமாரை விட்டு நக்மா விலகினார். அதன்பிறகு நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவை கடந்த 2001ம் ஆண்டில் 2வது திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் நடிகை நக்மா, நடிகர் சரத்குமாரை பிரிந்த நிலையில் 50 வயதுகளை கடந்தும் இன்னும் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். நடிகை ஜோதிகாவின் அக்கா நக்மா என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்