- Advertisement -
Homeபொழுதுபோக்குகன்னட சிவராஜ் குமார் நடிக்க முடியாததால் தமிழ் நடிகருக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ் - இதையாவது...

கன்னட சிவராஜ் குமார் நடிக்க முடியாததால் தமிழ் நடிகருக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ் – இதையாவது சொதப்பாம கொஞ்சம் நடிங்க பாஸ்!

- Advertisement -

கன்னடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ்குமார். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நண்பராக கேமியோ ரோலில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சில காட்சிகளில் வந்தாலும் அவரது கம்பீரமான நடிப்பு சிறப்பாக இருந்தது. தொடர்ந்து தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருந்தார். அடுத்து ஜெயிலர் 2 படத்திலும் சிவராஜ்குமார் நடிக்க உள்ளார்.

ஈட்டி, ஐங்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரவி அரசு. கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படம் ஒன்றை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அவர் இயக்க உள்ளதாக ஓராண்டுக்கு முன்பே தகவல் வந்தது. இந்த படம் சிவராஜ்குமாரின் 130வது படம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த படம் துவங்கப்படவில்லை.

- Advertisement -

இந்த சூழலில் தற்போது அந்த படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நடிகர் சிவராஜ்குமாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் 6 மாதங்கள் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெறுவதால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்று தெரிய வந்தள்ளது.

இந்த காரணத்தால், நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 69 படத்திலும் நடிக்க கமிட் ஆன சிவராஜ்குமார் பின்னர், அந்த படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் அவர் கடைசி ஷெட்யூலில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 6 மாதங்களுக்கு பின்தான் அவர் ஷூட்டிங்கில் கலந்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், இயக்குனர் ரவி அரசு இயக்கும் படத்தில் நடிக்க முடியாமல் போனதால், அந்த வாய்ப்பு நடிகர் விஷாலுக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிக்க நடிகர் விஷால் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். அதை அட்வான்ஸ் ரூ. 5 கோடி, ஷூட்டிங்கில் ரூ. 5 கோடி, டப்பிங்கில் ரூ. 5 கோடி, படம் ரிலீஸின் போது ரூ. 5 கோடி என தருவதாக சத்யஜோதி பிலிம்ஸ் உறுதியளித்துள்ளது. ஆனால் இன்னும் தொகையை தரவில்லை.

நடிகர் விஷாலுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே சினிமாவில் பெரிய ஹிட் படங்கள் இல்லை. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் பெரிய வெற்றியை பெற்றாலும், அதற்கு காரணம் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா நடிப்புதானே தவிர, விஷால் காரணமில்லை. ரத்னம் படமும் பிளாப் ஆகிவிட்டது. அதனால் ரவி அரசு இயக்கும் இந்த படத்தில் எந்த குறுக்கீடும் செய்யாமல் சரியாக நடித்தால் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்