- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதை வேண்டுமென்றே செய்யவில்லை, தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க - பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகை...

இதை வேண்டுமென்றே செய்யவில்லை, தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க – பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகை நயன்தாரா

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. திருமணத்துக்கு பிறகும் சில நடிகைகளுக்கு மட்டுமே மார்க்கெட் சரிவதில்லை. அந்த வரிசையில் தமிழ் சினிமா நடிகைகளில் நயன்தாரா மிக முக்கியமானவராக இருக்கிறார். இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில், சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா, ஐயா என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அடுத்து ரஜினி, விஜய், அஜீத், தனுஷ், சூர்யா, ஆர்யா, சிம்பு, சியான் விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து, முன்னணி நடிகையானார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் நயன்தாராவுக்கும் சிலம்பரசனுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக உதட்டு முத்தம் கொடுத்த புகைப்படங்கள் டிரண்டிங் ஆனது. பிறகு, பிரேக்கப் ஆனது. அதன்பின், பிரபுதேவாவுடன் சில ஆண்டுகள் நயன்தாரா, காதல் வசப்பட்டு இருந்தார். பிறகு அதுவும் பிரேக்கப் ஆனது.

இதையடுத்து விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார். அப்போது டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டு, 7 ஆண்டுகளுக்கு பின் திருமணமும் செய்துக்கொண்டார். வாடகைத்தாய் மூலம் 2 குழந்தைகளுக்கும் இருவரும் பெற்றோர் ஆகிவிட்டனர்.

- Advertisement -

இந்த சூழலில் அன்னபூரணி படத்தில் ராமர், சீதை குறித்து சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்றதால், அந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதுகுறித்த நயன்தாரா, ஜெய் ஸ்ரீராம் என குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதில், நான் நடித்த அன்னபூரணி படம் ஒரு உத்வேகம் தரும் பாசிட்டிவ் மெசேஜ் உடன் உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்துவது படத்தின் நோக்கமும் அல்ல. நானும் கடவுள் நம்பிக்கை கொண்டவள். நாடு முழுவதும் இருக்கும் கோவில்களுக்கு நானும் அடிக்கடி செல்கிறேன். படம் குறித்த சர்ச்சையை, வேண்டும் என்றே செய்யவில்லை. மனம் புண்பட்டிருப்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என அதில் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்