- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்ஐகே படத்துக்காக தனது பாலிசிகளை மறந்த நடிகை நயன்தாரா - அந்த படத்துக்கும் இதே மாதிரி...

எல்ஐகே படத்துக்காக தனது பாலிசிகளை மறந்த நடிகை நயன்தாரா – அந்த படத்துக்கும் இதே மாதிரி வருவாரா? – ஆதங்கப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்றவர்களே அவர்கள் நடித்த படங்கள் வெளியாகும் போது இசை வெளியீட்டு விழா டிரெய்லர் வெளியீடு போன்ற பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கின்றனர். படம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகின்றனர். படத்துக்கு நல்ல விளம்பரத்தை ரசிகர்களிடம் தேடித் தருகின்றனர்.

ஆனால் நடிகர்களில் அஜீத்குமாரும் நடிகைகளில் நயன்தாராவும் இதில் இருந்து விதிவிலக்கானவர்கள். அஜீத்குமார் தனது படங்களில் பிரமோசன் நிகழ்ச்சி எதிலும் கலந்துக்கொள்ள மாட்டார். அதே போல் நயன்தாராவும் தனது பட விழாக்களுக்கு எட்டிப் பார்க்க மாட்டார். இயக்குனர் தயாரிப்பாளர் மற்ற நடிகர்கள் தான் இந்த படத்தை பிரமோசன் செய்து ஜெயிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தற்போது நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் எஸ்ஜே சூர்யா கீர்த்தி ஷெட்டி நடித்த எல்ஐகே படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம், தயாரிப்பாளர் லலித்குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் பிரமோஷன் பணிகளை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்தான் கவனித்து வருகிறது.

பொதுவாக நயன்தாரா அவர் நடிக்கும் பட விழாக்களில் கலந்துக்கொள்ள மாட்டார். அவர் நடித்த படங்களின் பாடல் வெளியீட்டு விழா பிரமோசன்களுக்கு நயன்தாரா வரமாட்டார். தனது படம் குறித்து பேட்டி கொடுக்க மாட்டார். இதுதான் அவரது பாலிசிகளாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்த போக்கு அவரிடம் உள்ளது. ஆனால் எல்ஐகே படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கலந்துக்கொண்டார்.

- Advertisement -

அவர் மேடையில் பேசாவிட்டாலும் மேடையில் ஏறி தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு சப்போர்ட் செய்தார். எல்ஐகே படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக வந்த நிலையில் சமீபத்தில் சென்னை கமலா தியேட்டருக்கு தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் நயன்தாரா விசிட் செய்தார். அதை வீடியோவாக வெளியிட்டு பப்ளிசிடி செய்தார்.இப்படி எந்த படத்துக்கும் நயன்தாரா இதுவரை செய்தது இல்லை. தனது கணவரின் வெற்றிக்காக இப்படி செய்கிறார். தனது பாலிசியை மாற்றிக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

இதே போல் மற்ற தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் பல கோடி ரூபாய் முதலீடு போட்டு படத்தின் வெற்றிக்காக ஏங்கும்போது நயன்தாரா அவர்களுக்கு விளம்பர விஷயத்தில் சிறிதும் உதவவில்லை. தனது கணவரின் படம் தனது தயாரிப்பில் உருவான படம் என்பதால் இப்படி தனது பாலிசிகளை மாற்றி இருக்கிறார். மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கும் இதேபோல் நயன்தாரா ஒத்துழைப்பு தருவாரா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்

- Advertisement -

சற்று முன்