நடிகர் விமல் நடித்த களவாணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஓவியா. நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக பங்கேற்ற விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக ஓவியா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியால் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அடையாளத்தையும் ஓவியா பெற்றார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் அவரது வெளிப்படையான தன்மையும் ஒளிவு மறைவற்ற சிறப்பான நடவடிக்கைகளையும் தினமும் பார்த்து ரசித்த மக்கள் ஓவியா ஆர்மி என்று சமூக வலைதளங்களில் டிரண்டிங் ஆகும் அளவுக்கு ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் நடிகை ஓவியாவுக்கு கிடைத்தது.
இந்நிலையில் நடிகை ஓவியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் மற்றும் இன்றைய தமிழக முதல்வர் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் குறித்து ஒரு விவகாரமான பதிவை செய்திருக்கிறார். அதில் அவர் ரூட் மாஃபியா அம்பலப்படுத்த வேண்டும் என்று ஓவியா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் நடத்திவரும் நிறுவனத்தின் பெயர் ரூட். விஜய் கீர்த்தி சுரேஷ் ராஷ்மிகா மந்தனா பூஜா ஹெக்டே சமந்தா கல்யாணி பிரியதர்ஷன் துஷாரா விஜயன் மற்றும் இயக்குனர்கள் அட்லி எச் வினோத் லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் கதிர் அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் இந்த ரூட் நிறுவனத்தில் கீழ் இயங்கும் முக்கிய சினிமா நட்சத்திரங்களாக உள்ளனர்.
இதற்கு முன்பு நடிகை பிரியங்கா மோகன் இந்த ரூட் நிறுவனத்தின் கீழ் இருந்து விலகிய பிறகு அவர் சமூக வலைதளங்களில் கடுமையாக டிரோல் செய்யப்பட்டதும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில் நடிகை ஓவியா தற்போது இந்த ரூட் நிறுவனம் பற்றி வெளிப்படையாக விமர்சித்து பதிவிட்டுள்ளது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் தான் முதல்வர் விஜயின் அரசியல் செயல்பாடுகளை சமூக வலைதளங்களை பரப்புவதை கவனித்துக் கொள்வதாக சொல்கிறார்கள். இவர்களது கட்டுப்பாட்டில் பல இன்ப்ளுயன்சர்கள் யூடியூப் பிரபலங்கள் இருக்கிறார்கள் என்கின்றனர். நடிகை ஓவியாவும் ஜெகதீஷூம் சில காலம் ஒன்றாக லிவிங் டு கெதரில் இருந்ததாகவும் கோலிவுட்டில் ஒரு கிசுகிசு இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படி ஒரு பதிவை நடிகை ஓவியா செய்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





