தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் பிரியா பவானி சங்கர். துவக்கத்தில் டிவி சானல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிறகு, சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். ரத்னக்குமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவ் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரியா பவானி சங்கர் அறிமுகமானார்.
தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், யானை, ருத்ரன், ரத்னம் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார். எனினும் பெரிய அளவில் ரசிகர்களிடம் அவர் ரீச் கொடுக்கவில்லை. இதற்கிடையே அவர் ராசியில்லாத நடிகை, அவர் நடித்தால் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாது என்ற ஒரு விமர்சனம் கிளம்பியது. இதனால் பிரியா பவானி சங்கர் சினிமா எதிர்காலம் விரைவில் மூடுவிழா கண்டுவிடும் என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் தன்னை பற்றிய ராசியில்லாத நடிகை என்ற விமர்சனத்தை அடித்து நொறுக்கும் விதமாக அவர் நடித்த டிமாண்டி காலனி 2 பாகம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் அருள்நிதி நாயகனாக இருந்தாலும், படம் முழுக்க நடிப்பில் வெளுத்துக் கட்டியது பிரியா பவானி சங்கர்தான். அந்த படத்தின் திரைக்கதையில் ஆணிவேராக இருப்பது அவர்தான்.
டிமாண்டி காலனி 2 படத்தின் மிகப்பெரிய வெற்றியும், ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அபரிமிதமான வரவேற்பும் இன்னும் 10 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் பிரியா பவானி சங்கர் பயணிப்பதற்கான வாசல் கதவுகளை திறந்துவிட்டதாகவே தெரிகிறது. இந்த படத்தின் வெற்றி பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்திருக்கிறது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய பிரியா பவானி சங்கரிடம், கவர்ச்சியான மாடர்ன் ஆடைகளை நீங்கள் அணிந்து நடிப்பதில்லையே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மாடர்ன் உடை அணிந்து நடித்தால், சினிமாவில் உயர்ந்து விடலாம் என்று சொல்வதை நான் ஏற்க மாட்டேன். மாடர்ன் உடையில் நடிப்பதுதான் மிகவும் சவாலான விஷயம்.
ஆனால் நான் அவ்வாறு மாடர்ன் டிரஸ் அணிந்து நடிக்க மாட்டேன். இப்போது நான் நடித்து வரும் கேரக்டர்களே எனக்கு வசதியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி நான் கிளாமராக உடையணிந்து கிளாமராக நடிப்பதை என் ரசிகர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று, அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.





