- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பும் வாய்ப்பும் கிடைக்கலையா? வெப் சீரிஸ்சில் நடிக்க தயாரான டாக்டர் பட நடிகை...

சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பும் வாய்ப்பும் கிடைக்கலையா? வெப் சீரிஸ்சில் நடிக்க தயாரான டாக்டர் பட நடிகை – என்ன கொடும சார் இது?

- Advertisement -

சினிமாவில் நுழைவது எவ்வளவு கடினமோ அதை விட கடினம் சினிமாவில் நீடித்து நிலைத்து நிற்பதுதான். திறமை அழகு என எது இருந்தாலும் நல்ல படங்கள் நல்ல கேரக்டர்கள் அமையாவிட்டால் யாராக இருந்தாலும் மார்க்கெட் அவுட் ஆகி விரைவில் பெவிலியன் திரும்ப வேண்டியதுதான்.

ஆனால் பெரும்பாலான அழகான நடிகைகள், குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையாவது தமிழில் இல்லாவிட்டாலும் தெலுங்கு இந்தி மலையாளம் என சினிமாவில் பல மொழிகளில் முயற்சித்து விட்டு பிறகுதான் வெப் சீரிஸ் அல்லது டிவி சேனல் நாடகங்களுக்கு மாறுவார்கள். அல்லது பல ஆண்டுகள் கழித்து சீரிஸ்களில் நடிப்பவர்களுக்கும் இருக்கவே செய்கின்றனர்.

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் கேங்ஸ்டர் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா மோகன். தமிழில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் தனுஷூக்கு ஜோடியாகவும் பிரதர் படத்தில் நடிகர் ரவி மோகனுக்கு ஜோடியாகவும் நடித்தார். பிறகு சூர்யாவின் சனிக்கிழமை என்ற படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் கோல்டன் ஸ்பாரோ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.

- Advertisement -

ஆனால் நடிகை பிரியங்கா மோகனுக்கு தொடர்ந்து தமிழில், தெலுங்கில் படங்கள் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் நடிகை பிரியங்கா மோகன் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த வெப் தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தயாரிக்க உள்ளது. கதாநாயகியை மையப்படுத்தி உருவாக உள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு பணிகள் ஜப்பானில் நடைபெற உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி நடிகைகள் பலரும் வெப்சீரிஸில் நடிப்பது சகஜம்தான் என்றாலும் பிரியங்கா மோகனுக்கு தமிழில் தெலுங்கில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பும் இல்லாததால் தான் அவர் வெப் சீரிஸ்சில் நடிக்கும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் அழகான நடிகையான அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாதது அவரது ரசிகர்களை புலம்ப வைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்