இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமானவர் நடிகை ராதா. நடிகவேள் எம்ஆர் ராதாவின் மகள். நடிகர் ராதாரவியின் சகோதரி. மேலும் நடிகர் ராம்கியின் மனைவி நிரோஷா தான் ராதிகாவின் சகோதரி. குறிப்பாக நடிகர் சரத்குமாரின் மனைவி என பல அடையாளங்கள் ராதிகாவுக்கு உள்ளது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் ராதிகா மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு கலைஞர். விரைவில் அதை நிரூபிக்கும் விதமாக அவர் நடிப்பில் உருவான தாய்கிழவி படம் வெளியாக போகிறது. நடிகர்கள் ரஜினி கமல் விஜயகாந்துடன் பல படங்களில் ராதிகா நடித்தவர்.
குறிப்பாக நடிகர் ரஜினியுடன் நல்லவனுக்கு நல்லவன் போக்கிரி ராஜா ரங்கா உள்ளிட்ட படங்களில் ராதிகா நடித்திருக்கிறார். பொதுவாகவே ராதிகா, தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களை கிண்டல் செய்யும் பழக்கம் கொண்டவர். யாராக இருந்தாலும் அவர் கலாட்டா செய்து விடுவது வழக்கம். எம்ஆர் ராதா மகள், பாரதிராஜாவின் அறிமுகம் சிறந்த நடிகை என்பதால் ராதிகா மீது எல்லோருக்குமே தனிப்பட்ட மரியாதை பிரியமும் உண்டு.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது, நான் ரஜினியுடன் நிறைய படம் பண்ணியிருக்கேன். ஒருமுறை ஒரு பங்க்சனுக்கு ரஜினி வந்தார். அப்போது ரஜினி காலில் ரப்பர் ஸ்லிப்பர் போட்டுட்டு வந்தார். நான் அவரிடம், நீங்க பெரிய நடிகர்தானே? சூப்பர் ஸ்டாருன்னு எல்லாரும் சொல்றாங்க என்றேன்.
அதுக்கு அவர் யா யா என்று வேகமாக பதில் சொன்னார். அப்புறம் என்ன செருப்பு இது? என்று கிண்டலாக கேட்டு சிரித்து விட்டேன். அதுக்கு அப்புறம் அவர் எங்கு வந்தாலும் நான் அங்கு இருந்தேன்னா முதலில் என்னை பார்த்துட்டு அப்புறம் அவர் தனது காலை தான் பார்ப்பார். அந்த பயம் எப்பவும் இருக்கட்டும் என்று நான் அவரிடம் கிண்டலாக அப்போது சொல்வேன்.
கோச்சடையான் ஷூட்டிங்குக்காக இப்போ லண்டனுக்கு ஷூட்டிங் போன போது, ரஜினி அங்கு உட்கார்ந்து இருந்தார். அப்போது அவர் கால்களில் ஷூ போட்டிருந்தார். நான் அவரிடம், ரஜினி ஷூ போட்டிருக்கீங்க என்றேன். அவர் உடனே பதறிப் போய், ஆமா ஆமா கரெக்டா போட்டிருக்கேன், கரெக்டா போட்டிருக்கேன் என்று என்கிட்ட வேகமாக சொன்னார் என்று நடிகை ராதிகா சரத்குமார் அந்த நேர்காணலில் ரஜினி குறித்து குஷியாக பேசியிருக்கிறார்.





