- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பாட்டை பார்த்தாலே எனக்கு நெகட்டிவ் எண்ணம் தான் வரும், நடிகர் பிரபுதேவாவுடன் நடித்த கசப்பான...

அந்த பாட்டை பார்த்தாலே எனக்கு நெகட்டிவ் எண்ணம் தான் வரும், நடிகர் பிரபுதேவாவுடன் நடித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த நடிகை ரோஜா!

- Advertisement -

கடந்த 1995ம் ஆண்டில் நடிகர் பிரபுதேவா ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் ராசய்யா. இந்த படத்தில் ரோஜா ராதிகா எம்என் நம்பியார் தியாகு ஆர் சுந்தர்ராஜன் வினு சக்கரவர்த்தி விஜயகுமார் வடிவேலு தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற காதல் வானிலே என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த பாடல் காட்சி குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, ராசய்யா படத்தில் இடம்பெற்ற காதல் வானிலே காதல் வானிலே பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்த பாட்டு. பாங்காக்குல அந்த பாட்டு ஷூட் பண்ணினோம். அந்த பாட்டை பார்க்கறதுக்கு ரொம்ப பிளாசண்ட்டா அந்த பாட்ட இருக்கும். ஹாயா அந்த டிரஸ் போட்டுட்டு எக்ஸ்பிரஷன் காட்டீட்டு அந்த பாட்டு இருக்கும்.

- Advertisement -

ஆனா அங்கே எப்படி இருக்கும் தெரியுமா? டைம். அந்த டைமுக்கு உள்ளே நாலைஞ்சு லொக்கேஷன் போகணும். பாட்டை ஷூட் பண்ணி ஆகணும். சூட்கேஸ் எடுத்து கார் மேல போடுவாங்க. கயித்தை போட்டு கட்டுவாங்க. வேகமாக அந்த லொக்கேஷனுக்கு போவோம்.

போனவுடனே அந்த லொக்கேஷன் டிரஸ் கொடுப்பாங்க. ஏதோ ஒரு எடத்துல போய் டக்குடக்குன்னு டிரஸ்சை போட்டுட்டு வருவோம். லாங்க் ஷாட் ரெண்டு மீடியம் ஷார்ட்டர் ரெண்டு வெச்சு எடுப்பாங்க. திருப்பி எல்லா பேக் பண்ணி சூட்கேஸ்ல போட்டுட்டு கார்ல கட்டீட்டு மறுபடியும் வேற லொக்கேஷனுக்கு வேகமாக போயிடுவோம்.

- Advertisement -

ரொம்பவும் கம்மியான டைம். அதனால ஓடீட்டே இருப்போம். ஓடீட்டே இருப்போம். ஆனால் படத்துல பார்த்தால் அதெல்லாம் எதுவுமே தெரியாது. ரொம்பவும் ஹாயா ரொம்ப அழகா ரொம்ப சாப்டா அந்த பாட்டு இருக்கும். நிறைய டிரஸ் சேஞ்ச் இருக்கும். ஒவ்வொரு லொக்கேஷன்லயும் ஒரு டிரஸ் இருக்கும்.

அப்புறம் குளோசப் எல்லாம் சென்னை வந்து எடுத்தோம். என்கிட்ட அந்த பாட்டை பத்தி பேசறவங்க எல்லாம், எவ்வளவு ஜாலியா பண்ணியிருக்கீங்க. இந்த பாட்டு எவ்வளவு சூப்பரா மெலோடியா இருக்குதுன்னு சொல்வாங்க. உங்களுக்கு அப்படி இருக்கு. ஆனா எனக்கு இந்த பாட்டை பார்த்தா ஓட்டம்தான் ஞாபகம் இருக்கு. பாங்காக் என்றாலே அந்த பாட்டுக்கு ஓடின நெகட்டிவ்தான் மனசுல இருக்குது என்று நடிகை ரோஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்