- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெகவுக்கு வர இவரும் ரெடி ஆயிட்டாரா? - திடீரென நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன மாஜி...

தவெகவுக்கு வர இவரும் ரெடி ஆயிட்டாரா? – திடீரென நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன மாஜி கதாநாயகி ரோஜா!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கிய நடிகர் விஜயை பலரும் தாறுமாறாக விமர்சித்து வந்த நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அவரது கட்சிக்கு பலம் கூடிக்கொண்டே போகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக கட்சியில் இணைந்த பிறகு இன்னும் பல முக்கிய கட்சி நிர்வாகிகள் தவெகவுக்கு வர வாய்ப்பு உருவாகி உள்ளது.

தமிழக அரசியல் களத்தில் திமுக அதிமுக ஆகிய 2 கட்சிகள் மட்டுமே இதுவரை ஆட்சி செய்து வரும் நிலையில் மாற்று அரசியலை விரும்பும் மக்களுக்கு நடிகர் விஜய் இந்த முறை முக்கிய சாய்ஸ் ஆக இருப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். கரூர் சம்பவம் விஜய்க்கு பின்னடைவை தந்தாலும் இப்போது சகஜ நிலைக்கு கட்சியும் அவரும் திரும்பிவிட்டதாகவே தெரிகிறது.

- Advertisement -

இந்த சூழலில் முன்னாள் கதாநாயகி நடிகை ரோஜா விஜய் குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். நடிகை ரோஜா ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழில் அவரை செம்பருத்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. தொடர்ந்து ரோஜா தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை ரோஜாவின் கணவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி இப்போது பெப்சி அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார். நடிகை ரோஜா கடந்த பல ஆண்டுகளாக ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார். கடந்த ஒய்எஸ்ஆர் ஆட்சி காலத்தில் ரோஜா விளையாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ரோஜா கூறியதாவது, லியோ படத்தில் கரு கரு கருப்பாயி என்ற பாடல் காட்சி இடம் பெற்றது. இதில் விஜய் அருமையாக நடனமாடி நடித்திருந்தார். அதனால் இந்த பாடல் பெரிய அளவில் ரசிகர்களிடம் ட்ரெண்டிங் ஆனதால் பலரும் இந்த பாட்டை யூடியூப்பில் தேடுகின்றனர். அப்போது நானும் பிரபுதேவாவும் பாடிய கருகரு கருப்பாயி பாடல் அதில் வருகிறது.

இதனால் பெரும்பாலான ரசிகர்கள் என்னுடைய அந்த பாடலையும் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் நான் நடித்த கருகரு கருப்பாயி பாடலை, லியோ படத்தில் நடிகர் விஜய் நடித்தது எனக்கு பெரிய கவனத்தை பெற்றுத் தந்திருக்கிறது. இதற்காக விஜய்க்கு ரொம்ப நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று நடிகை ரோஜா அதில் கூறியிருக்கிறார். அப்படியே தவெக கட்சிக்கு வருவது குறித்து யோசிங்க மேடம் என்று தளபதி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்