- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னும் முரட்டு சிங்கிளாக வலம் அந்நியன் நாயகி சதா… இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?...

இன்னும் முரட்டு சிங்கிளாக வலம் அந்நியன் நாயகி சதா… இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? – என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சதா. இந்த படத்தில் நாயகனாக அறிமுகமான ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். நெற்றியில் பொட்டு தலைநிறைய மல்லிகைப்பூ கால் வழிய கொலுசுகள் தாவணி பாவாடை காஸ்ட்யூமில் சதாவை பார்த்த ரசிகர்கள், அவரது இளமையான அழகில் தங்கள் இதயங்களை இழந்தனர்.

தொடர்ந்து தமிழில் சதா பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். குறிப்பாக நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாக திருப்பதி படத்திலும் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக அந்நியன் படத்திலும் நடித்திருந்தார். எதிரி என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். வர்ணஜாலம் பிரியசகி உன்னாலே உன்னாலே போன்ற பல படங்களில் நடித்தார்.

- Advertisement -

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. பிறகு தெலுங்கு படங்களிலும் அவரால் பெரிய அளவில் வெற்றியை காண முடியவில்லை. இதற்கிடையே டார்ச் லைட் என்ற படத்தில் அதிக கவர்ச்சியாக சதா நடித்ததால் அவரது இமேஜ் டேமேஜ் ஆனது. கடைசியில் நடிகர் வடிவேலுவுக்கு எலி படத்தில் ஜோடியாக நடித்தும் அவரால் சக்ஸ் ஆக முடியவில்லை.

தமிழ் சினிமாவில் நல்ல நடிகையாக வலம் வரவேண்டிய நடிகை சதா, நல்ல படங்களை நல்ல கேரக்டர்களை தேர்வு செய்ய தவறியதால் ஒரு கட்டத்தில் மார்க்கெட் சுத்தமாக இழந்து விட்டார். கடைசியாக டார்ச் லைட் மற்றும் எலி போன்ற படங்களில் சதா நடித்தது அவரது மொத்த இமேஜையும் பாதிக்க செய்துவிட்டது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஏற்கனவே திரிஷா கோவை சரளா அனுஷ்கா பூனம் பஜ்வா சித்தாரா கவுசல்யா தபு என பலரும் திருமண வாழ்க்கையை மறுத்துவிட்டு முரட்டு சிங்கிளாக வலம் வரும் நிலையில், நடிகை சதாவும் 41 வயதான நிலையில் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். திருமணம் செய்தால் சுதந்திரம் பறிபோய்விடும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த சூழலில் சினிமா வாய்ப்புகளை இழந்த நடிகை சதா, சீரியல் நடிகையாக டிவி பக்கம் செல்லாமல் வேறு தொழிலை கையில் எடுத்திருக்கிறார். வைல்டு லைப் போட்டோகிஃராபராக மாறியுள்ள நடிகை சதா, தான் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். காட்டுக்குள் எடுத்த அழகான பறவைகள், புலி போன்ற அவரது வீடியோக்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

- Advertisement -

சற்று முன்