- Advertisement -
Homeபொழுதுபோக்குபாட்டி பரிசாக கொடுத்ததை அதற்கு அணிய மாட்டேன் - பிடிவாதம் காட்டும் நடிகை சாய்பல்லவி -...

பாட்டி பரிசாக கொடுத்ததை அதற்கு அணிய மாட்டேன் – பிடிவாதம் காட்டும் நடிகை சாய்பல்லவி – ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!

- Advertisement -

மலையாளத்தில் பிரேமம் என்ற படம் மூலம் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சாய்பல்லவி. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த அவர், டாக்டர் படிப்பு படித்தவர் என்பது ரசிகர்கள் பலரும் அறியாத விஷயம். மலையாளத்தில் முதல் படமே பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் அறிமுகத்தை வரவேற்பை சாய்பல்லவிக்கு பெற்றுத் தந்துவிட்டது.

தொடர்ந்து தமிழில் தனுஷூடன் மாரி 2 படத்தில் நடித்தார். அதன்பிறகு சூர்யாவுடன் என்ஜிகே என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் டைரக்ட் செய்திருந்தார். தொடர்ந்து கார்கி என்ற படத்தில் சாய்பல்லவி நடிப்பு வேற லெவலில் இருந்தது. சிறுமிகள் பாலியல் தொல்லை குறித்த மிகவும் அழுத்தமான ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.

- Advertisement -

தொடர்ந்து கடந்த ஆண்டில் நடிகை சாய்பல்லவி சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த படம் அமரன், மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்திருந்தார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை படமாக்கி இருந்தனர்.

அமரன் படம் உலகம் முழுவதும் ரூ. 325 கோடி ரூபாய் வசூலித்து பெரிய வெற்றியை பெற்றது. தற்போது சாய்பல்லவி நடிப்பில் தெலுங்கில் தண்டேல் என்ற படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அடுத்து இந்தியில் இராமாயணம் என்ற படத்தில் சீதையாக சாய்பல்லவி நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த சூழலில் நடிகை சாய்பல்லவி ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது கூறியதாவது, எனக்கு 21 வயது ஆன போது, என்னுடைய பாட்டி என் திருமணத்துக்காக ஸ்பெஷலாக ஒரு பட்டுப்புடவையை எனக்கு பரிசாக வழங்கினார். ஆனால் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று தெரியாது.

ஆனால் தேசிய விருது போன்ற உயரிய விருதை பெறும்போதுதான் நான் அந்த புடடைவயை அணிந்துகொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் எனக்கு தேசிய விருது கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அந்த நேர்காணலில் நடிகை சாய்பல்லவி கூறியிருக்கிறார். திருமணத்துக்கு கொடுத்த பட்டுப்புடவையை விருதுக்கு கட்டிக்கொள்வேன் என்கிறாரே என சாய்பல்லவி ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்