- Advertisement -
ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சம்யுக்தா கூறியதாவது, மாரி செல்வராஜ் கிட்ட வெள்ளையா இருக்கிற நடிகைக்கு ஏன் கருப்பு மேக்கப் போட்டு நடிக்க வைக்கிறீங்கன்னு சூப்பரா ஒரு கேள்வி கேட்டால் ஒரு உடல் ஊனமுற்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஊனமுற்றவர்களை தான் நடிக்க வைக்கணுமான்னு ஒரு மோசமான பதிலை சொல்றார். அவர் கிட்ட இருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் நினைச்சா ஒரு சாதாரண பொண்ணை கூட கொண்டு வந்து சிறப்பாக நடிக்க வைக்க முடியாதா? அவர் தன்னோட சமூகத்துக்காக அவ்வளவு பேசுறார். அப்ப அவரோட சமூகத்தில் இருக்கிற திறமையானவர்களுக்காவது வாய்ப்பு கொடுக்கணும் என்று நடிகை சம்யுக்தா கூறியிருக்கிறார்.





