- Advertisement -
Homeபொழுதுபோக்கு10ம் வகுப்பு முடித்த மாணவியை, மனைவியாக நடிக்க வைத்த பிரபல நடிகர் - அந்த நடிகருக்காக...

10ம் வகுப்பு முடித்த மாணவியை, மனைவியாக நடிக்க வைத்த பிரபல நடிகர் – அந்த நடிகருக்காக அழுது அழுது சாப்பிட்ட அந்த ஹீரோயின் யாரு தெரியுமா

- Advertisement -

தமிழ் சினிமாவை பொருத்த வரை, சில நடிகர்கள், சில நடிகைகள் ஜோடியாக நடித்தால் பார்ப்பதற்கு ஜோடி பொருத்தம் அம்சமாக இருக்கும். நிஜ வாழ்க்கையை போலவே, சினிமாவிலும் அப்படி சில ஜோடிகள் நடிப்பதை ரசிகர்களும் விரும்புவர். இயக்குநர்கள், தயாரிப்பாளர்களும் இந்த கதைக்கு இவர்கள் ஜோடியாக நடித்தால் பெஸ்ட் என்று நினைப்பது வழக்கம்.

அந்த வகையில் ரஜினி- அம்பிகா, கமல் – ஸ்ரீதேவி, விஜயகாந்த் – ராதிகா, பிரபு – குஷ்பு, சரத்குமார் – மீனா, கார்த்திக் – ரேவதி, சத்யராஜ் – பானுப்பிரியா, விஜய் – திரிஷா, அஜீத் – நயன்தாரா நடித்தால் பார்ப்பதற்கு நல்ல ஜோடி பொருத்தமாக இருப்பார்கள். இப்படி அவர்கள் ஜோடியாக நடித்த பல படங்கள் வெற்றி படங்களாக இருந்திருக்கின்றன.

- Advertisement -

ஆனால் பல வேளைகளில் மார்க்கெட் உள்ள நடிகைகள் என்பதற்காக, அவர்களை பல நடிகர்களுக்கும் ஜோடியாக நடிப்பதுண்டு. உதாரணமாக சிநேகா தனுஷூக்கு ஜோடியாக புதுப்பேட்டையிலும், ராகவா லாரன்ஸ் ஜோடியாக பாண்டி படத்திலும் நடித்திருப்பார். வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலுக்கும் ஜோடியாக நடிப்பார். அஜீத், விஜய்க்கும் ஜோடியாக நடிப்பார். இப்படி ஒரே நடிகை அடுத்தடுத்த படங்களில் நடிக்கும்போது படம் வெற்றி பெற்றாலும் ஜோடி பொருத்தம் ரசிகர்களுக்கு திருப்தி தராது.

அதுபோல் ஒரு படம்தான், ராஜ்கிரண் – சங்கீதா நடித்த எல்லாமே என் ராசாதான் என்ற படம். சங்கீதா, ராஜ்கிரண் மனைவியாக நடித்த இந்த படத்தின் கதை மிக அற்புதமானது. கிராமத்து நாயகன், சீட்டாடுவதில் அதிக விருப்பம் கொண்டவன். அப்படிபட்ட நாயகனை, தன் அன்பால் திருத்தும் மனைவி, ஒரு கட்டத்தில் கொல்லப்படுகிறாள். மனைவியை கொன்றவனை, நாயகன் பழி தீர்ப்பதே கதை. படம் வெற்றி பெற்றாலும் ஜோடி பொருத்தம்தான் ரசிகர்களை யோசிக்க வைத்தது.

- Advertisement -

இந்த படத்தில் நடித்தது குறித்து, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை சங்கீதா கூறுகையில், பத்தாம் வகுப்பு முடித்தவுடனே, ராஜ்கிரண் ஜோடியாக எல்லாமே என் ராசாதான் படத்தில் நடிக்க முடிவானது. நான் மிக குட்டையாக சின்ன பெண்ணாக இருப்பேன். வெயிட் போட்டால்தான் ஷூட்டிங் என கூறிவிட்டனர்.

அந்த படத்தில் நடித்தாக வேண்டும் என்பதற்காக, உடல் எடை அதிகரிக்க அவித்த முட்டை, மலைப்பழம், ஐஸ்கிரீம், சாப்பாடு அதிகமாக சாப்பிட்டேன். ராஜ்கிரணுக்கு பயந்துக்கொண்டு என்னை சாப்பிடு, சாப்பிடு என என் குடும்பத்தினர் வற்புறுத்தினர். இப்படி சாப்பிட வைக்கிறார்களே என அப்போது அழுதிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் சங்கீதா.

- Advertisement -

சற்று முன்