நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்து விட்டார். அந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் இந்த படம் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தனது 173வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர் 173 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தனது சொந்தமான ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்தை முதலில் இயக்குனர் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. பிறகு சில காரணங்களால் அவர் விலகிக்கொண்ட நிலையில் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இந்த படத்தை இயக்குவதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வீடியோ வெளியானது. சாய் அபயங்கர் இசை என்றும் வருகிற 2027ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் என்றும் அதில் கூறப்பட்டது.
ஆனால் சிபி சக்ரவர்த்தி சொன்ன கதையில் ரஜினிக்கு திருப்தி இல்லை எனவும் கதையில் சில மாற்றங்களும் திருத்தங்களும் அவர் சொன்னதால் சிபிக்கு பதிலாக டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து படத்தை இயக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது.
இதற்கிடையே ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அமைத்துக்கொடுத்த ஆபீஸில்தான் இன்னமும் சிபி சக்ரவர்த்தி இந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் ரைட்டிங் உள்ள ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இறுதி முடிவாக தலைவர் 173 படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தான் என முடிவாகி உள்ளது.
ரஜினி படத்தை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் சிம்பு நடிக்கும் படம் அதே நிறுவனம் தயாரிக்கும் பிரதீப் ரங்கநாதன் படம் இரண்டையும் இயக்க உள்ளார். ரஜினி படத்தை இயக்க அஸ்வத்துக்கு ஏஜிஎஸ் நிறுவனம் என்ஓசி சான்றும் தந்து விட்டது. ஆனால் ராஜ்கமல் நிறுவனம் சிபி சக்ரவர்த்திக்கு இந்த தகவலை இன்னும் தெரிவிக்காமல் மறைப்பதாகவும் கூறப்படுகிறது.





