- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட் படத்தில் நடித்த போது தனக்கு ஏற்பட்ட அவமரியாதை குறித்து பேசிய நடிகை ஷோபனா… அந்த...

பாலிவுட் படத்தில் நடித்த போது தனக்கு ஏற்பட்ட அவமரியாதை குறித்து பேசிய நடிகை ஷோபனா… அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக உதவிய அந்த ஸ்டார் நடிகர்!

- Advertisement -

மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஷோபனா. தமிழில் தளபதி இது நம்ம ஆளு மல்லுவேட்டி மைனர் பொன்மனச்செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மணிசித்ரத்தாழ் என்ற மலையாள படத்தில் ஷோபனா நடித்த கேரக்டரில்தான் தமிழில் சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமே செய்துக்கொள்ளாமல் பரத நாட்டிய பயிற்சி பள்ளி நடத்தி வரும் நடிகை ஷோபனா அவ்வப்போது தனக்கு பிடித்தமான கேரக்டர் அமைந்தால் மட்டுமே சினிமாவில் நடிக்கிறார். சமீபத்தில் மோகன்லாலுடன் அவர் நடித்த துடரும் படம் மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. வசூலை வாரிக்குவித்துள்ளது. மோகன்லாலின் மனைவியாக ஷோபனா இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ஷோபனா கூறியதாவது, நடிகர் அமிதாப் பச்சன் நடித்த இந்தி படம் ஒன்றில் நான் ஒரு பாடலில் நடிக்க கமிட் ஆனேன். அந்த பாடலில் கொஞ்ச நேரமே வந்து போகும் ஒரு கேரக்டரில் நான் நடித்தேன். அகமதாபாத்தில் அந்த படத்தின் சூட்டிங் நடந்தது.

அந்த பாடல் காட்சியில் நான் நிறைய உடைகளை அணிந்தபடி நடிக்க வேண்டி இருந்தது. அது மட்டுமின்றி அந்த படப்பிடிப்பில் அமிதாப்பச்சனை பார்க்க ரசிகர்கள் கூட்டம் ஒரு பக்கம் அலைமோதியது. அதனால் படக்குழுவினரிடம், எங்கே என் கேரவன் என்று நான் கேட்டேன். ஏனென்றால் அந்த கூட்டத்தில் கேரவன் இருந்தால் தான் நான் பாதுகாப்பாக உடை மாற்ற வேண்டிய நிலை இருந்தது.

- Advertisement -

அதற்கு அந்த படக்குழுவில் இருந்த ஒருவர், அவர் மலையாள திரை உலகில் இருந்து வந்திருப்பவர் தான். எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்வார். அதனால் அந்த மரத்தின் பின்னால் நின்று உடையை மாற்றி விட்டு வரச் சொல்லுங்கள் என்று கூறினார். அவர் இப்படி சொன்னதை, அங்கே நின்றிருந்த தனது கேரவனில் அமர்ந்திருந்த அமிதாப் பச்சன் தன்னிடம் இருந்த வாக்கி டாக்கியில் கேட்டுவிட்டார்.

உடனே வேகமாக கேரவனை விட்டு வெளியே வந்து அமிதாப் பச்சன், யார் அப்படி சொன்னது என்று கோபமாக கேட்டார். படக் குழுவினர் அப்படியே நடுங்கிப் போய்விட்டனர். அதன் பிறகு அவர் தன்னுடைய கேரவனுக்கு என்னை அழைத்துச் சென்று, உடைமாற்றுமாறு கூறிவிட்டு வெளியே ஓரமாக நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டார். இப்போது கல்கி படத்தில் அவருடன் நடித்த போதும் கூட அப்போது பார்த்த அதே மனிதாபிமானம் இப்போதும் அமிதாப் பச்சனிடம் இருக்கிறது என்று பேசியிருக்கிறார் நடிகை ஷோபனா.

- Advertisement -

சற்று முன்