- Advertisement -
Homeபொழுதுபோக்குசுதாகர் கோபியின் பரிதாபங்கள் சேனலை தடை செய்ய வேண்டும், சொசைட்டி பாவங்கள் வீடியோவால் ஏற்பட்ட சர்ச்சை...

சுதாகர் கோபியின் பரிதாபங்கள் சேனலை தடை செய்ய வேண்டும், சொசைட்டி பாவங்கள் வீடியோவால் ஏற்பட்ட சர்ச்சை – போலீசில் புகார்!

- Advertisement -

சமீபகாலமாக யூடியூப் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக பலரும் பிரபலமாகி வருகின்றனர். இதில் சிலர் நடிகர் நடிகைகளாக சினிமாவிலும் நடிக்க வந்துவிடுகின்றனர். பரிதாபங்கள் என்ற பெயரில் யூடியூப் சேனலில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர்.

இவர்களது பரிதாபங்கள் சேனலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சுதாகர் மற்றும் கோபி சில படங்களிலும் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக காமெடி கேரக்டர்களில் கோபி சுதாகர் நடித்து வருகின்றனர். சில நேரங்களில் சமூக பிரச்னைகளையும் தங்களது பரிதாபங்கள் சேனலில் காமெடி வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் பரிதாபங்கள் சேனலில் கோபி சுதாகர் நடித்த சொசைட்டி பாவங்கள் என்ற வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவில் அவர்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டி வெளியிட்டு இருந்தனர். இந்த வீடியோவில் சாதிவெறிக்கு எதிராக காமெடி உடன் சமூக கருத்துக்களை கோபி மற்றும் சுதாகர் பேசியிருந்தது பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

அதே நேரத்தில் இந்த வீடியோ டெலிட் ஆவதற்குள் பார்த்து விடுங்கள் என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கினர். ஏற்கனவே திருப்பதி லட்டு தொடர்பான பரிதாபங்கள் சேனல் வீடியோ மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது. பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அந்த வீடியோ நீக்கப்பட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சனை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருக்கிறது.

குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவு படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூப் தளத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். பரிதாபங்கள் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருக்கிறார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்