- Advertisement -
Homeபொழுதுபோக்கு15 நொடிகளில் காலியான ஜெய்லர் டிக்கெட்டுகள்.. மாஸ் காட்டும் ரசிகர்கள்

15 நொடிகளில் காலியான ஜெய்லர் டிக்கெட்டுகள்.. மாஸ் காட்டும் ரசிகர்கள்

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் தயாராகி உள்ள படம் ஜெய்லர். நெல்சனின் பீஸ்ட் படம் சரியாக போகாத நிலையில் அவருடைய இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பாரா இல்லையா என்பது ஆரம்ப கட்டத்தில் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரஜினிகாந்த் நெல்சனுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கவே ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.

பேன் இந்தியா படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் சுனில் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காவலா மற்றும் அக்கும் ஆகிய இரண்டு பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அக்கும் பாடல் பெரிய அளவில் ரஜினி ரசிகர்களை கவரும் வண்ணத்தில் உள்ளது.

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா
இந்த மாத இறுதியில் நடைபெறும் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜூலை 28ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவை இலவசமாக பார்ப்பதற்காக 1000 டிக்கெட்களுக்கான லிங்கை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் கணக்கில் வெளியிட்டது. அப்படி அந்த லிங்கை வெளியிட்ட 15 நொடிகளில் ஆயிரம் டிக்கெட்டுகளும் காலியானதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் படத்தின் மீது எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெளியான ரஜினியின் சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இலையிலும், தன்னுடைய போட்டி நடுகரான கமலின் விக்ரம் படம் அதிகப்படியான வசூலை குவித்துள்ள நிலையிலும் ரஜினிக்கும் இது மிக முக்கியமான ஒரு படம் என்றே கூறலாம்.

- Advertisement -

சற்று முன்