- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்போது போல்தான் இப்போதும் நடந்து கொள்கிறார் - தமிழக முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த பிரபல...

அப்போது போல்தான் இப்போதும் நடந்து கொள்கிறார் – தமிழக முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த பிரபல நடிகை நெகிழ்ச்சி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் விஜய். ஒரு படத்தில் நடிக்க 250 கோடி ரூபாய் வரை அதிக சம்பளம் பெற்ற முதல் தமிழ் ஹீரோ விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவக்கி கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தலையும் சந்தித்தார். 108 இடங்களில் அபார வெற்றி பெற்ற நிலையில் இப்போது தமிழக முதல்வராகவும் விஜய் இருந்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் விஜயை தமிழ் சினிமாத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் நடிகர் நடிகைகளும் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் திரைத்துறை சார்ந்து தங்களது முக்கிய கோரிக்கைகளையும் முதல்வர் விஜயிடம் மனுவாக அளித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் புதிய படங்கள் ரிலீஸானால் 7 நாட்களுக்கு தொடர்ந்து 5 காட்சிகள் வரை திரையிட்டுக் கொள்ளலாம் என்று முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முதல்வர் விஜயை நடிகை சிம்ரன் தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 1990களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன்.

நடிகர் விஜயுடன் துள்ளாத மனமும் துள்ளும் பிரியமானவளே உதயா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். நடிகர் விஜயும் சிம்ரனும் ஆடிய ஆல்தோட்ட பூபதி யூத் பாடல் காட்சி இன்றும் டிரண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் தனது கணவர் மற்றும் 2 பிள்ளைகளுடன் முதல்வர் விஜயை நடிகை சிம்ரன் நேற்று நேரில் சந்தித்த நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

- Advertisement -

நடிகை சிம்ரன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து திரையை பகிர்ந்து கொண்ட பிறகு மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் விஜய் அவர்களை எனது குடும்பத்தினருடன் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அன்று முதல் இன்று வரை எண்ணற்ற மக்களின் அன்பை பெற காரணமான அவருடைய அதே அரவணைப்பு எளிமை மற்றும் நேர்மை இப்போதும் அவரிடம் துளியும் மாறாமல் அப்படியே இருக்கிறது.

தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான விஜயின் அர்ப்பணிப்பும் தொலைநோக்கு பார்வையும் எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது. மேலும் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் வழிநடத்திச் செல்லவிருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் எதிர்கால பணிகளுக்கான நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த பதிவில் நடிகை சிம்ரன் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்