- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் வெற்றிமாறன் இப்படி பண்றாரே? - சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் இளம் ஹீரோ...

இயக்குனர் வெற்றிமாறன் இப்படி பண்றாரே? – சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் இளம் ஹீரோ கென் கருணாஸ்!

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இப்போது நடிகர் சிம்பு நடித்து வரும் அரசன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே நடிகர் கென் கருணாஸ் நடித்து வரும் ராஜன் வகையறா படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த 2 படங்களுக்குமே தயாரிப்பாளர் தாணு தான் என்பதால் அதற்கேற்ப மாறி மாறி ஷூட்டிங் நடக்கிறது.

ஆனால் அரசன் படப்பிடிப்புக்கு முதன்மையான முக்கியத்துவமும் அந்த படப்பிடிப்பு தடைபடும் நேரங்களில் ராஜன் வகையறா படப்பிடிப்பும் நடப்பதால் பல மாதங்களாக இந்த படப்பிடிப்பு நீடிக்கிறது. இப்படியே போனால் இன்னும் பல நாட்களுக்கு ராஜன் வகையறா படப்பிடிப்பு முடியாது என்ற நிலை உள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் 30 முதல் 40 நாட்களுக்குள் இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட இயக்குனர் வெற்றிமாறன் திடீர் முடிவு செய்திருக்கிறார். அதற்கு காரணம் படத்தின் நாயகன் கென் கருணாஸ் தான். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் கென் கருணாஸ்.

மேலும் அசுரன் விடுதலை 2 போன்ற படங்களில் அவரை முக்கிய கேரக்டர்களில் வெற்றிமாறன் நடிக்கவும் செய்திருந்தார். கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து கட்டா குஸ்தி இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் ஒரு படத்தில் கென் கருணாஸ் நடிக்க உள்ளார்.

- Advertisement -

மேலும் கென் கருணாஸின் அப்பா நடிகர் கருணாஸ் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தை கென் கருணாஸ் இயக்கி அவரே நடிக்கவும் ஸ்கிரிப்ட் ரெடி செய்துள்ளார். இப்படி 2 படங்கள் ரெடியாக உள்ள நிலையில், ராஜன் வகையறா படப்பிடிப்பு நீடித்துக்கொண்டே போவதால் கென் கருணாஸ் பயங்கர அப்செட்டில் உள்ளார்.

இதுகுறித்து வெற்றிமாறனிடம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்த நிலையில் அதை தெரிந்துக்கொண்ட வெற்றிமாறன் மிக விரைவில் ராஜன் வகையறா படப்பிடிப்பை முடித்து விட்டு கென் கருணாஸை விடுவிக்க முடிவு செய்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்