நடிகை சினேகா தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த நடிகையாக இருந்தவர். அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. சுசி கணேசன் இயக்கத்தில், விரும்புகிறேன் படத்தில், நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் சினேகா.
தொடர்ந்து ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, வசீகரா, கிங், ஏப்ரல் மாதத்தில், போஸ், பார்த்தின் கனவு, பிரிவோம் சந்திப்போம், ஆட்டோகிராப், நான் அவன் இல்லை, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து சினேகா ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
ஒரு கட்டத்தில் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்த போது, அந்த படத்தில் நாயகனாக நடித்த பிரசன்னாவுடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டு, இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
திருமணத்துக்கு பிறகு வேலைக்காரன், பட்டாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சினேகா, பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாததால் டிவி ரியாலிடி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். காமெடி ஷோ, நடன நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்துக்கொண்டு பொழுதை கழிப்பதோடு அதன்மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகிறார்.
இந்நிலையில், வசீகரா படத்துக்கு பிறகு இப்போது தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருக்கிறார். அப்பா, மகன் என 2 ரோல்களில் விஜய் நடித்துள்ள நிலையில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும், மகன் விஜய்க்கு அம்மாவாகவும் சினேகா நடித்துள்ளார். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இதையடுத்து தி கோட் படம் தன்னுடைய திரை பயணத்தில் தனக்கு கம்பேக் ஆக அமையும் என்று கருதும் நடிகை சினேகா, தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர தயாராகி விட்டார். இப்போது சற்று உடல் பருமனான நிலையில், குண்டாக காணப்படும் அவர் ஸ்லிம் ஆக மாறும் முயற்சியில், ஜிம்மில் வியர்க்க வியர்க்க விறுவிறு என கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 2 பிள்ளைகளுக்கு தாயாகி 42 வயதுகளை கடந்த நிலையில், புன்னகை அரசிக்கு இத்தனை கஷ்டம் தேவையா என ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.





