தமிழ் சினிமாவின் சீனியர் நடிகை கே ஆர் விஜயா புன்னகை அரசி என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். எம்ஜிஆர் சிவாஜி போன்ற தமிழ் சினிமா ஜாம்பவான் நடிகர்களுடன் பல படங்களில் நடித்தவர் கே ஆர் விஜயா. அவரது அழகான சிரிப்புக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்த பட்டம்தான் புன்னகை அரசி என்பதாகும்.
அதற்கு பிறகு நடிகை சினேகாவுக்கு புன்னகை அரசி என்ற பட்டப்பெயர் தமிழ் சினிமா ரசிகர்களால் தரப்பட்டது. நடிகை சினேகா விரும்புகிறேன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குனர் சசி கணேஷ் இயக்கிய விரும்புகிறேன் படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். இந்த படத்தில் சினேகாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து புதுப்பேட்டை ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே வசீகரா வசூல்ராஜா எம்பிபிஎஸ் பம்மல் கே சம்பந்தம் கிங் ஜி உள்ளிட்ட பல படங்களில் கமல், விஜய், தனுஷ், ஷ்யாம், அஜீத்குமார், விக்ரம் உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்த நடிகை சினேகா முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். சினேகாவுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்தது.
நடிகர் ஸ்ரீகாந்த் உடன் போஸ், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் நடித்த போது ஸ்ரீகாந்துக்கும் சினேகாவுக்கும் காதல் ஏற்பட்டதாக தகவல் பரவியது. விரைவில் திருமணம் செய்துக்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. ஏனெனில் இந்த படங்களில் அந்தளவுக்கு சினேகா, ஸ்ரீகாந்துடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்திருந்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் நடிகை சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். சமீபமாக டிவி சேனல்களில் நடுவராக பங்கெடுத்து வரும் நடிகை சினேகா அவ்வப்போது முக்கிய கேரக்டர்களை தேர்வு செய்து சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தில் நடிகை சினேகா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சினேகாவிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் சற்றும் தயங்காமல், தல அஜீத் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். என் அக்காவுக்கு தளபதி விஜய் மிகவும் பிடிக்கும். என் அக்காவின் அறையில் விஜய் புகைப்படங்கள் அதிகமாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





