- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் பிச்சை எடுத்துக்கூட சாப்பிடுவேன், ஆனா வடிவேலுடன் படத்தில் நடிக்க மாட்டேன் - வடிவேலு...

நான் பிச்சை எடுத்துக்கூட சாப்பிடுவேன், ஆனா வடிவேலுடன் படத்தில் நடிக்க மாட்டேன் – வடிவேலு பெயரை சொன்னவுடன் ஆவேசமான நடிகை சோனா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் வரிசையில் முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்று அழைக்கப்பட்ட வடிவேலு கடந்த 1990 முதல் 2010ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் முன்ணனி நடிகராக வலம் வந்தார். ஏராளமான படங்களில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

இப்போதும் சினிமாவில் நடித்து வரும் நடிகர் வடிவேலு குறித்து அவருடன் நடித்த சக கலைஞர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தன்னுடன் காமெடி காட்சிகளில் நடித்த துணை நடிகர்களை வளர விடாமல், அவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்காமல் தடுத்தவர் வடிவேலு என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

நடிகர் கஞ்சா கருப்பு அளித்த ஒரு பேட்டியில், வடிவேலு போன்ற ஒரு மோசமான மனிதர் கிடையாது. தன்னுடன் இருப்பவர்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவழிக்க மாட்டார். யாருக்குமே உதவ மாட்டார் என்று கூறியிருந்தார். நடிகர் தம்பி ராமையா, வடிவேலு குழுவில் ஆரம்பத்தில் இருந்தார். பிறகு அவரது செயல்பாடுகள் பிடிக்காமல் விலகி, இப்போது ஒரு முக்கிய நடிகராக அவர் உயர்ந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த குசேலன் படத்தில் சலூன் கடை சண்முகம் என்ற கேரக்டரில் நடிகர் வடிவேலு நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சோனா நடித்திருந்தார். அழகர்மலை என்ற படத்திலும் வடிவேலுக்கு சோனா ஜோடியாக நடித்திருந்தார். சோனா தமிழ் சினிமாவில் பல படங்களில் கவர்ச்சியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சோனா கூறியதாவது, குசேலன் படத்துக்கு பிறகு வடிவேல் கூட 16 படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. கோடி ரூபாய் கொடுத்தா கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பிச்சை எடுத்துக் கூட சாப்பிடுவேனே தவிர வடிவேலு படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிட்டேன்.

வடிவேலு பத்தி பேசுற அளவுக்கு அவர் ஒர்த் கிடையாது. நான் அவர் கூட எந்த படத்திலும் இனிமேல் நடிக்க விரும்பவில்லை. வடிவேல் பத்தி வேற யார் கிட்டயாவது என்ன நினைக்கிறீங்க என்று இன்டர்வியூவில் கேட்டு பாருங்க, நிறைய பேரு கழுவி கழுவி ஊத்துவாங்க. அதையே நானும் பண்ண வேணாமுன்னு நினைக்கிறேன் என்று நடிகை சோனா கோபமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்