- Advertisement -
Homeபொழுதுபோக்கு7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தில் அவர் கேமியோ ரோலில் வருகிறாரா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இயக்குனர்...

7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தில் அவர் கேமியோ ரோலில் வருகிறாரா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இயக்குனர் செல்வராகன் – இது தரமான சம்பவமா இருக்குதே?

- Advertisement -

இயக்குனர் செல்வராகவன் இயக்கிய பல படங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் 7ஜி ரெயின்போ காலனி. கடந்த 2004ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. ரவி கிருஷ்ணா சோனியா அகர்வால் சுமன் ஷெட்டி விஜயன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

தமிழ் சினிமாவில் வந்த காதல் திரைப்படங்களில் டாப் 10 படங்களில் மிக நிச்சயமாக 7ஜி ரெயின்போ காலனி படத்துக்கும் இடம் உண்டு. அந்த அளவுக்கு காதல் உணர்வுகளை மிக அற்புதமாக தந்த படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக கண் பேசும் வார்த்தைகள் புரியவில்லை என்ற நா முத்துக்குமாரின் பாடல் வரிகள் இப்போதும் ரசிகர்களிடம் டிரண்டிங்கில் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ரவி கிருஷ்ணாவுக்கு பிலிம்பேர் சார்பில் சிறந்த அறிமுக நடிகர் விருது கிடைத்தது. மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கும் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருது இந்த படத்துக்கு கிடைத்தது. ஏனெனில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்களாக கொண்டாடப்பட்டன.

இந்த படம் 2004ம் ஆண்டில் வெளியான நிலையில் 22 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மீண்டும் கதாநாயகனாக ரவி கிருஷ்ணா நடித்திருக்கிறார். ஆனால் கதாநாயகியாக வேறு ஒரு நடிகை நடித்துள்ளார்.

- Advertisement -

ஏனெனில் முதல் பாகத்தில் இந்த படத்தின் இறுதியில் கதாநாயகி சோனியா அகர்வால் இறந்து விடுவார். அதனால் இந்த 2ம் பாகத்தில் நாயகியாக அவர் நடிக்க முடியாது. ஆனால் அந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர் சோனியா அகர்வால்தான். மேலும் இந்த படத்தில் நடித்த போதுதான் இயக்குனர் செல்வராகவன், அவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

ஆனால் துரதிஷ்டவசமாக இருவரும் சில ஆண்டுகளில் பிரிந்து விட்டனர். எனினும் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தில் சோனியா அகர்வால் இல்லை என்றால் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள் என்பதால், அவரை இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க செய்துள்ளார். அதனால் சோனியா அகர்வால் இறந்த பிறகு தேவதையாக வரும் கற்பனை காட்சிகள் முதல் பாகத்தை போலவே 2ம் பாகத்திலும் வருகின்றன என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்